Home இந்தியா "முதலிரவுக்குள்ளேயே பிரிச்சிட்டாங்க ,பொண்டாட்டிய கடத்திட்டாங்க" -மச்சான் மீது மாப்பிள்ளை புகார்

“முதலிரவுக்குள்ளேயே பிரிச்சிட்டாங்க ,பொண்டாட்டிய கடத்திட்டாங்க” -மச்சான் மீது மாப்பிள்ளை புகார்


சகோதரியை காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரப்பட்ட தம்பி மாப்பிளையை தாக்கி அக்காவை தூக்கிக்கொண்டு போன சம்பவம் காதல் ஜோடிகள் மத்தியில் கலக்கத்தை உண்டு பண்ணியுள்ளது .

Hemendra has now filed a complaint against Mukesh and his friend Rooplal Patel for kidnapping his wife.


ராஜஸ்தானில் துங்கர்பூரில் வசிக்கும் ஹேமேந்திர பட்டிதர், இந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி ராஜஸ்தானில் நிஷா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார் . பின்னர் ஹேமேந்திரா தனது காதல் மனைவியோடு அகமதாபாத்தில் ஒரு வாடகை வீட்டில் வாழத் தொடங்கினார்.இதனை கேள்விப்பட்ட நிஷாவின் சகோதரர் முகேஷ் மற்றும் அவரது நண்பர் ரூப்லால் படேல் ஆகியோர் அஹமதாபாத்துக்கு சென்று அவரின் சகோதரியை மீட்டு வர முடிவு செய்தார் .
அதன்படி முகேஷ் மற்றும் அவரது நண்பர் ரூப்லால் படேல் ஆகியோர் அஹமதாபாத்துக்கு சென்று அவரின் சகோதரி நிஷாவையும் அவரின் கணவரையும் ஊருக்கு வருமாறு கூறி ஏமாற்றி ஒரு காரில் அழைத்து சென்றனர் .பின்னர் அவர்கள் போகும் வழியில் தனது சகோதரியின் கணவரையும் உடன் வந்த அவரின் உறவுக்கார சிறுவனையும் அடித்து உதைத்து காயப்படுத்தி காரிலிருந்து கீழே இறக்கிவிட்டனர் .பின்னர் தன்னுடைய சகோதரியை மட்டும் கடத்திக்கொண்டு ஓடி விட்டார்கள் .இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர் ஹேமேந்திர அருகிலுள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய மைத்துனர் மீது புகார் கூறினார் .மேலும் தன்னுடைய காதல் மனைவியை மீட்டு தருமாறு கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தேடுவதாகவும், அவர்கள் மீது கடத்தல் மற்றும் தாக்குதல் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் கூறினர்.

Rep Image

மாவட்ட செய்திகள்

Most Popular

நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்!

குழந்தைகள் தங்கள் தாய், தந்தை, உடன் பிறந்தவர்களைப் பார்த்து பார்த்துத்தான் ஒவ்வொரு விஷயத்தையும் செய்யப் பழகுகின்றனர். கண் விழித்ததிலிருந்து தூங்கச் செல்வது வரையில் ஒவ்வொரு நிகழ்வையும் அவர்கள் கண்காணிக்கிறார்கள். அதன்...

எம்ஜிஆர் செய்த அந்த செயலை உதயநிதி செய்ய முடியுமா? அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,...

27 ஆம் தேதி வெளியே வரும் சசிகலாவால் ஆட்டம் காணப்போகிறார் எடப்பாடி- முக ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் – எடப்பாடி தொகுதிக்குட்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்க சிலர் முயற்சி ஆனால் இங்கு யாரும் நுழைய முடியாது- அமைச்சர் செங்கோட்டையன்

எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி கே.கே.நகர் சிவன் பார்க் எதிரில் உள்ள பொப்பிளி ராஜா சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர், அமைப்பு...
Do NOT follow this link or you will be banned from the site!