“எலே ஏத்தி கொடுக்கலேன்னா எடுத்துக்குவேன்” சம்பள உயர்வு தராத முதலாளியை ,ஒரு தொழிலாளி பழிவாங்கிய விதத்தை பாருங்களேன் .

“எலே ஏத்தி கொடுக்கலேன்னா எடுத்துக்குவேன்” சம்பள உயர்வு தராத முதலாளியை ,ஒரு தொழிலாளி பழிவாங்கிய விதத்தை பாருங்களேன் .

பரிதாபாத்தில் நிதின் என்பவரிடம் தீட்சித் என்பவர், அவரின் கட்டுமான கம்பெனியில் நீண்ட வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் நிதின் தன்னுடைய தொழிலாளி தீட்தித்துக்கு ரொம்ப நாளாகவே சம்பள உயர்வு வழங்கவே இல்லை .இதனால் அவர் தன்னுடைய ஓனர் நிதின் மீது கோபமாக இருந்தார் ,.மேலும் அவர் ஒருநாள் கோபத்தில் பலரின் முன்னாள் தீட்சித்தை திட்டியுள்ளார் .இதனால் தன்னுடைய முதலாளி நிதினை பழிவாங்க காத்திருந்தார் தீட்சித்.ஒருநாள் நிதின் ஒருவரிடம் சென்று 10 லட்ச ரூபாய் பணம் வாங்கி வரச்சொன்னார் . தீட்சித் ஆகஸ்டு 13 ம் தேதி அந்த 10 லட்ச ருபாய் பணத்தை அவர் சொன்ன நபரிடமிருந்து வாங்கிக்கொண்டு வந்தார் .

“எலே ஏத்தி கொடுக்கலேன்னா எடுத்துக்குவேன்” சம்பள உயர்வு தராத முதலாளியை ,ஒரு தொழிலாளி பழிவாங்கிய விதத்தை பாருங்களேன் .
பிறகு அந்த பணத்தை தன்னுடைய முதலாளியிடம் சேர்க்காமல் ,தன்னுடைய வீட்டில் கொண்டு போய் ஒளித்து வைத்தார் .பிறகு நிதினுக்கு போன் செய்து ,உங்களுடைய பணம் 10 லட்சத்தை யாரோ ஒருவர் தன்னை தாக்கிவிட்டு கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கூறினார் .பிறகு நிதின் ஆலோசனைப்படி அருகிலுள்ள போலீசில் தீட்சித் புகார் கொடுத்தார் .
போலீசார் தீட்சித்தை துருவி துருவி விசாரித்த போது ,அவரை யாரும் மிரட்டி பணத்தை கொள்ளையடித்து செல்லவில்லையென்றும் ,தான்தான் தன்னுடைய முதலாளி நிதின் நீண்ட நாட்களாக சம்பள உயர்வு வழங்காத கோபத்தில் அந்த பணத்தை எடுத்து ஒளித்து வைத்துள்ளேன் என்று கூறினார் .பிறகு போலீசார் தீட்சித் மீது வழக்கு பதிந்து , அவரை விசாரித்து வருகின்றனர் .

“எலே ஏத்தி கொடுக்கலேன்னா எடுத்துக்குவேன்” சம்பள உயர்வு தராத முதலாளியை ,ஒரு தொழிலாளி பழிவாங்கிய விதத்தை பாருங்களேன் .