உத்தர பிரதேசத்தில் நடக்கும் அநியாயம்… 1.09 கோடி நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்துவதே கிடையாதாம்..

 

உத்தர பிரதேசத்தில் நடக்கும் அநியாயம்… 1.09 கோடி நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்துவதே கிடையாதாம்..

உத்தர பிரதேசத்தில் 1.09 கோடி நுகர்வோர் மின் இணைப்பு பெற்ற நாளிலிருந்து மின்சார கட்டணம் செலுத்தியதே கிடையாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி அரசு நுகர்வோருக்கு 24 மணி நேரமும் மின்சார வசதி இருக்கும் வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் உத்தர பிரதேச மக்களோ 24 மணி நேரமும் எங்களுக்கு கரண்ட் இருக்கணும் ஆனால் அதற்கு பணம் எல்லாம் கட்ட முடியாது என்ற மனநிலையில் உள்ளது போல் தெரிகிறது. அம்மாநிலத்தில் 1.09 கோடி மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதை கிடையாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் நடக்கும் அநியாயம்… 1.09 கோடி நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்துவதே கிடையாதாம்..
முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் மின்விநியோகம் மற்றும் பகிர்மானத்தில் ஈடுபட்டு வரும் அரசு நிறுவனம் உத்தர பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (யூ.பி.பி.சி.எல்.). இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் கூடுதல் தலைமை செயலர் (எரிசக்தி) அரவிந்த் குமார் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், மாநிலத்தில் மொத்தமுள்ள 2.83 கோடி மின் நுகர்வோர்களில் 1.09 கோடி பேர் ஒருபோதும் மின் கட்டணம் செலுத்தியதே இல்லை. மின் கட்டண செலுத்த தவறியவர்களில் 96 சதவீதம் பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள்.

உத்தர பிரதேசத்தில் நடக்கும் அநியாயம்… 1.09 கோடி நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்துவதே கிடையாதாம்..
உத்தர பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்

மின் கட்டணம் செலுத்தாவர்களிடமிருந்து வசூலாக வேண்டிய தொகை மட்டுமே ரூ.60 ஆயிரம் கோடியாகும். மின் கட்டணத்தை செலுத்தாவர்களில் ஒரு பெரிய பகுதி போலியானது மற்றும் மசோதா திருத்தம் தேவைப்படலாம். இந்த நுகர்வோர்களை கண்டுபிடித்து மீட்கக்கூடியது என்ன மற்றும் மீட்டெடுக்கக்கூடியது எது, எது இல்லை என்பதை கண்டுபிடிப்பது எங்கள் அதிகாரிகளுக்கு பெரிய சவாலாக இருக்கும். யூ.பி.பி.சி.எல். மின் விநியோகம் செய்வதற்கு மின்சாரம் வாங்க வேண்டும். மக்கள் பணம் செலுத்தாவிட்டால், வாங்குவதற்கு போதுமான நிதி இருக்காது என பதிவு செய்து இருந்தார்.