Home தொழில்நுட்பம் UPI-ல் உள்ள ஆபத்து…! ‘ஹலோ நான் கஸ்டமர் கேர்லருந்து பேசுறேங்க…!?’

UPI-ல் உள்ள ஆபத்து…! ‘ஹலோ நான் கஸ்டமர் கேர்லருந்து பேசுறேங்க…!?’

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில்  நம் பாக்கெட்டில் பணம் இல்லை என்றாலும் பரவாயில்லை ; அக்கவுண்ட்டில் இருந்தால் போதும், ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி வேண்டியதை வாங்கிக்கொள்ள முடியும். இந்த அசுர தொழிநுட்ப வளர்ச்சிக்கு பின்னாடி ஏகப்பட்ட ஆப்ஸ்சும்  கூடவே ‘ஆப்பு’ம் பின்தொடர்ந்தே வரும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஏன்னா டிஸைன் அப்படி! 

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில்  நம் பாக்கெட்டில் பணம் இல்லை என்றாலும் பரவாயில்லை ; அக்கவுண்ட்டில் இருந்தால் போதும், ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி வேண்டியதை வாங்கிக்கொள்ள முடியும். இந்த அசுர தொழிநுட்ப வளர்ச்சிக்கு பின்னாடி ஏகப்பட்ட ஆப்ஸ்சும்  கூடவே ‘ஆப்பு’ம் பின்தொடர்ந்தே வரும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஏன்னா டிஸைன் அப்படி! 

இன்று பெரும்பாலான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு UPI என்ற பணம் செலுத்தும் முறையை உபயோகப்படுத்தும் செயலிகளையே உபயோகிக்கிறோம். உதாரணமாக Google Pay, Paytm, Phonepe, BHIM, MobiKwik போன்றவை. நாம் Net Banking, ATM பயன்படுத்தும் போது எப்படியெல்லாம் பணத்தை ஆட்டையை போடுகிறார்கள் என்று நிறையவே கேள்விப்பட்டிருப்போம்… சிலருக்கு நேரடி அனுபவங்களும் ஏற்பட்டிருக்கலாம். ஏதோ நமக்கு மட்டும்தான் இப்படி நடக்குது போல என்று பலர் இப்படி ஏமாற்றப்பட்டதை வெளியில் சொல்வதுகூட இல்லை. இப்பொழுது UPI பயன்படுத்தும் போது வருகிற பிரச்சனைகளை பார்ப்போம். 

upi-apps

Money Request Method

நாம் முதலில் காணப்போகும் வகை பிரச்சனை பெரும்பாலும் olx, quikr போன்ற கொடுக்கல் வாங்கல் Appகளிலேயே நடக்கிறது. உதாரணமாக ஒருவர் தன்னுடைய பொருள் ஒன்றை விற்பதற்கு olx-ல் பதிவிட்டுள்ளார். ஒருவர் அதைப் பார்த்துவிட்டு பேரம்பேசி ஒரு விலைசொல்லி முடிவுக்கு வருகிறார்கள். இப்போது வாங்கப்  போகும் நபர் “உங்களுக்கு UPi-ல் request கொடுக்கிறேன் accept செய்யுங்கள் என்று சொல்லி ஒரு request money என்று அனுப்புகிறார். அந்த request-யை accept செய்தவுடன் UPI Pin கேட்கிறது. அந்த PIN எண்ணை உள்ளிட்டால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பணம் போய்விடும். 

money-request-method gpay

அதாவது பணம் கொடுப்பவருக்கு பதில் பணம் வர வேண்டிய அக்கவுண்ட்டில் இருந்து பணம் போய்விடும். இது குறித்து Google தரப்பிலிருந்து ஒரு விளம்பரம் கொடுத்து விளக்கமாகச் சொல்லியிருந்தார்கள்.எத்தனை பேர் அதைப் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை! பணம் அனுப்புவதற்கு மட்டுமே pin தேவை, பணம் பெறுவதற்கு எந்தவித எண்ணும் கொடுக்க தேவையில்லை. இனிமேல் யாராவது உங்களுக்கு பணம் அனுப்புகிறேன், Request Accept செய்யுங்கள் என்றால் அவர் உங்களை சீட்டிங் செய்யப்பார்க்கிறார் என்பதை உணர்ந்து உஷாராகிவிடுங்கள்.

gpay-arrow

மேலும் google pay இதற்காக ஒரு சிறப்பு யுக்தியை கையாள்கிறது. யாருடைய அக்கவுண்ட்டிற்கு  பணம் போகப்போகிறது என்பதை அம்புக்குறி மூலம் சுட்டிக்காட்டிவிடும். முன்பின் தெரியாத ஒரு எண்ணில் இருந்து Request வந்தால் அதை Block செய்யலாம் அல்லது spam என report செய்யலாம்.

 

Screen sharing ஆஃப்கள்

இந்த வகையில் நாம் யாருக்காவது பணம் அணுப்பும் போது transaction தோல்வியடைந்து விடும். ஆனால் அக்கவுண்ட்டில் இருந்து பணம் போய்விடும். இதை தெரிந்து கொண்டு சில மோசடி பேர்வழிகள் தாங்கள் Bank customer care-ல் இருந்து பேசுவதாக சொல்லி ஒரு APP-யை இன்ஸ்டால் செய்ய சொல்வார்கள்.  இது என்ன APP என்றால் screen sharing app. இதை install செய்தால் நமது மொபைலின் screen-யை இன்னொருவர் பார்க்கலாம். நமது பிரச்சனையை சரிசெய்வதாக சொல்லி இந்த செயலியை install செய்ய சொல்லுவார்கள். நாம் install செய்து விட்டால் அவ்ளோதான். நம்முடைய screen-ல் என்ன இருக்கிறது என்பதை மட்டும் அவர்களுக்கு காண்பிக்காது. நமது மொபைலின் மொத்த கட்டுப்பாட்டையும் அவர்களிடம் கொடுத்துவிடும். அப்புறம் சொல்லவா வேண்டும். நமது தகவல்கள் அனைத்தும் அவர்கள் கையில். நம்முடைய பணத்திற்கு பட்டை நாமம்தான்.

anydesk-app

Screen Share செய்ய பயன்படுத்தப்படும் ஆஃப்கள் சில: Anydesk, Teamviewer, Screen share

போலியான UPI ஆஃப்கள்:

ஒரிஜினல் போலவே நிறைய போலி ஆப்களும் Playstore-ல் வலம் வருகிறது. உதாரணமாக BHIM என்ற போலவே Modi BHIM, BHIM guide, BHIM customer care போன்ற போலியான ஆப்கள் நிறைய உள்ளன. நீங்களும் இதை உண்மையான ஆப் என்று நம்பி உங்களுடைய வங்கி கணக்குகளை கொடுத்தால் அவ்ளோதான்.

fake-upi-apps

எச்சரிக்கை மணி அடிச்சாச்சு… இனி உங்க Money நீங்கதான் பொறுப்பு.

மாவட்ட செய்திகள்

Most Popular

கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை திருட்டு!

கோவை கோவையில் அம்மன் கோயில் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் சுவாமி சிலையை திருடிசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை காட்டூர்...

சசிகலாவுக்காக காலியாக இருக்கும் ‘அமமுக தலைவர்’ பதவி!

நெருங்கி வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் அரசியல் களத்தை அதிரி புதிரியாக மாறியுள்ளது. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, விருப்ப மனு பெறுதல் என அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக...

பெண்களாக மாறிய ‘ஆண்’ இரட்டையர்கள்… “பிடிக்காத உறுப்பு நீக்கப்பட்டது” என பெருமிதம்!

ஆணாதிக்க மனோபாவத்தில் ஒருசில ஆண்கள் பாலுறுப்பை காரணம் காட்டி 'ஆண் நெடில்' பெருமை பேசுவார்கள். அவர்கள் எந்த உறுப்பை வைத்து பெருமிதம் கொண்டார்களோ அதே உறுப்பை வேண்டாமென நீக்கி திருநங்கைகள்...

“கர்ப்பமா இருக்கும் போது கூடவா இப்படி செய்வே” -கணவனால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி

கர்ப்பிணி மனைவி மீது சந்தேகப்பட்ட ஒரு கணவன், அவரை கொன்று உடலை இரண்டு நாள் வீட்டிலேயே வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டார்
TopTamilNews