இன்று தமிழகம் வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்!

 

இன்று தமிழகம் வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார்.

2021 சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தின் பிரதான கட்சிகள் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் தேர்தல் ஆணையமும், தேர்தல் பணிகளை துரிதமாக செய்து வருகிறது. முன்னதாக விரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம், கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அத்துடன் தேர்தலுக்கான தேதியை தேர்வு செய்யும் நோக்கில், மாநில மற்றும் உள்ளூர் விடுமுறை பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பற்றி ஆலோசனை நடத்த இன்று சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர். சுனில் அரோரா உள்ளிட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக காலை 11 மணிக்கு வருகின்றனர். சுனில் அரோரா சுசில் சந்திரா உமேஷ் சின்ஹா ராஜ்குமார் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு இன்று சென்னை வருகிறது.

இன்று தமிழகம் வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்!

மதியம் 12 மணிக்கு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை தேர்தல் ஆணைக்குழு தனித்தனியே சந்தித்து கருத்துக்களை கேட்கிறது. மாலை 3.30 மணிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். மாலை 4 முதல் இரவு 9 மணிவரை ஆட்சியர்கள் மண்டல ஐ.ஜி.க்கள், எஸ்.பி.களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

இன்று தமிழகம் வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்!

நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலாளர் ,உள்துறை செயலாளர், ஆகியோருடன் ஆணையக் குழு ஆலோசனை நடத்துகிறது. பிறகு நாளை மதியம் 1 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் குழு பத்திரிக்கையாளர்களை சந்திக்கின்றனர்.