குடியரசுத் தலைவர் பெயர் கூட தெரியாத முதல் மதிப்பெண் பெற்ற ஆசிரியர்! – உ.பி-யில் தொடரும் அதிர்ச்சி

 

குடியரசுத் தலைவர் பெயர் கூட தெரியாத முதல் மதிப்பெண் பெற்ற ஆசிரியர்! – உ.பி-யில் தொடரும் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் உதவி ஆசிரியர் தேர்வில் முதலிடம் பெற்றவருக்குக் குடியரசுத் தலைவர் பெயர் கூட தெரியாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட இந்தியாவில் தேர்வுகளில் அதிக அளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. தமிழகத்தில் நுழைவுத் தேர்வின்போது கம்மல் கூட போட அனுமதிக்காத அதிகாரிகள், வட இந்தியாவில் புத்தகத்தையே தூக்கிக்கொடுப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது. பெற்றோர்கள் திரண்டு வந்து தங்கள் பிள்ளைகளுக்கு பிட் கிழித்துக் கொடுத்த வரலாற்றை எல்லாம் பார்த்துள்ளோம். அவ்வளவு மோசமாக தேர்ச்சி உள்ள மாநிலங்களிலிருந்து உயர் படிப்புகளில் பலரும் முன்னிலை பெறுவது தொடர்ந்து சந்தேகத்தைக் கிளப்பி வருகிறது.

குடியரசுத் தலைவர் பெயர் கூட தெரியாத முதல் மதிப்பெண் பெற்ற ஆசிரியர்! – உ.பி-யில் தொடரும் அதிர்ச்சிஇந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் உதவி ஆசிரியர்கள் பணியிடத்துக்கு நடந்த தேர்வில் 69 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில், ராகுல் என்பவர் தனக்கு ஆசிரியர் பணியிடம் பெற்றுத் தருவதாக சிலர் பணம் பெற்று ஏமாற்றியதாக புகார் கூறினார். இதன் அடிப்படையில் பிரயாக்ராஜ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் தேர்வில் 95 சதவிகித மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்த தர்மேந்திர படேல் என்பவரும் சிக்கினார். அவரிடம் எப்படி வெற்றி பெற்றீர்கள் என்று கேட்டபோது, கடித்து பாஸ் செய்ததாகக் கூறியுள்ளார். ஆனால் சந்தேகம் அடைந்த போலீசார் இந்தியாவின் குடியரசுத் தலைவர் யார் என்று கேட்டுள்ளனர். ஆனால், பதில் தெரியாமல் விழித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் பெயர் கூட தெரியாத முதல் மதிப்பெண் பெற்ற ஆசிரியர்! – உ.பி-யில் தொடரும் அதிர்ச்சி
இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதாக கூறப்படும் பலர் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு சாதாரண பொது அறிவு கேள்விகளுக்கு கூட பதில் தெரியவில்லை. கடைசியாக குடியரசுத் தலைவர் பெயரையாவது கூறுங்கள் என்று கேட்டோம். அது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. குடியரசுத் தலைவர் பெயரைக் கூட தெரிந்து வைத்திருக்க முடியாத இவர்கள் எப்படி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றிருப்பார்கள் என்ற சந்தேகம் வந்தது. இதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.