உ.பியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி!

உ.பியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி!

கடந்த 14 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியது. இதனால் நிலைகுலைந்து போன அந்த பெண் டெல்லியிலுள்ள ஜவர்கஹலால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் அங்கிருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

உ.பியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி!

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததுடன், அவரின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டிருந்தது. கொடூரமான தாக்குதல்களுக்கு ஆளான அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் நேற்று சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் குடும்பத்தினருடன் காணொலி காட்சி மூலம் உரையாடிய முதல்வர் யோகி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.