“ஓடிப்போன அக்காவை தேடிப்போய் சுட்ட தம்பி”-சாதிமாறி திருமணம் செய்ததால் நடந்த கவுரவ கொலை..

 

“ஓடிப்போன அக்காவை தேடிப்போய் சுட்ட தம்பி”-சாதிமாறி திருமணம் செய்ததால் நடந்த கவுரவ கொலை..

கவுரவக்கொலையை தடுக்க அரசு எவ்வளவு முயற்சி எடுத்தாலும் இன்னும் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது ,அதில் பல பெண்கள் காவு கொடுக்கப்படுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் .
உத்தரபிரதேசத்தின் ஆக்ராவுக்கருகில் மெயின்பூரி மாவட்டத்தில் அங்கோதா கிராமத்தைச் சேர்ந்த  ஜோதி மிஸ்ரா என்ற பெண் , 2018 ஆம் ஆண்டில், அருகிலுள்ள பிரிஜ்புரா கிராமத்தில் கால்நடை மருத்துவரான ரோஹித் யாதவுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார் .இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் இருவரின் வீட்டிலும் இந்த திருமணத்திற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது ,குறிப்பாக ஜோதியின்

“ஓடிப்போன அக்காவை தேடிப்போய் சுட்ட தம்பி”-சாதிமாறி திருமணம் செய்ததால் நடந்த கவுரவ கொலை..

சகோதரர் குல்ஷன் மிஸ்ரா (19) மற்றும் அவரின் இரண்டு உறவினர்கள் உட்பட மூன்று பேர் இந்த திருமணத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர் .அது மட்டுமல்லாமல் அவர் வீட்டை விட்டு ஓடி, வேறு ஒரு சாதிக்காரரை திருமணம் புரிந்ததால் அவர்கள் வீட்டில் யாரும் பெண்ணெடுக்க தயங்கினார்களாம் .
இதனால் அவர்கள் சம்பவத்தன்று ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சகோதரி ஜோதியின் வீட்டிற்கு போனார்கள் .

“ஓடிப்போன அக்காவை தேடிப்போய் சுட்ட தம்பி”-சாதிமாறி திருமணம் செய்ததால் நடந்த கவுரவ கொலை..அப்போது வீட்டிலிருந்த சகோதரி ஜோதியை அவரின் தம்பி துப்பாக்கியால் ஆறு முறை சுட்டு கொன்றார் .பிறகு அவரின் கணவரையும் துப்பாக்கியால் சுட்டு பலத்த காயமடைய செய்தனர் .தனது சகோதரியை சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் அவருக்கு தாங்கள் தண்டனை கொடுத்ததாக அவர்கள் கூறினார்கள்.
இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்த போலீசார் விரைந்து வந்து அவரின் சகோதரர் குல்ஷன் மிஸ்ரா (19) மற்றும் இரண்டு உறவினர்கள் உட்பட மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பிறகு அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.