என்கவுண்டர் பயம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய விகாஸ் தூபேவுக்கு தகவல் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர்!

 

என்கவுண்டர் பயம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய விகாஸ் தூபேவுக்கு தகவல் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர்!

கான்பூரில் போலீசார் கைது செய்ய வருவது பற்றிய தகவலை விகாஸ் தூபேவுக்கு தெரிவித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் தானும் என்கவுண்டர் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சி செய்து வருகிறது. அங்கு கான்பூரில் பிரபல ரவுடி விகாஸ் தூபேவை கைது செய்ய சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 8 போலீசார் உயிரிழந்தனர்.

என்கவுண்டர் பயம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய விகாஸ் தூபேவுக்கு தகவல் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர்!இதைத் தொடர்ந்து விகாஸ் தூபே மற்றும் அவனது கூட்டாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர். தானாக வந்து சரணடைந்த விகாஸ் தூபேவை என்கவுண்டர் செய்தது தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், விகாஸ் தூபேவுக்கு போலீசார் கைது செய்ய வருவது தொடர்பான தகவலை அளித்ததாக சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ண குமார் ஷர்மா கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தானும் என்கவுண்டர் செய்யப்பட வாய்ப்புள்ளதாக அவருடைய மனைவி வினிதா சிரோஹியிடம் கூறியுள்ளார்.

என்கவுண்டர் பயம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய விகாஸ் தூபேவுக்கு தகவல் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர்!இதைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் சார்பில் அவரது மனைவி வினிதா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “எட்டு போலீசார் கொல்லப்பட்டது தொடர்பாக விகாஸ் தூபே மற்றும் அவனது கூட்டாளிகள் என மொத்தம் நான்கு பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். சரண் அடைந்தவர்களை என்கவுண்டர் செய்துள்ளனர். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் அதை தங்கள் கையில் எடுத்திருப்பதை இது காட்டுகிறது. உ.பி போலீசாரால் கைது செய்யப்படுபவர்கள் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்டு வருகின்றனர்.

என்னுடைய கணவர் கே.கே.ஷர்மாவையும் என்கவுண்டர் செய்ய வாய்ப்புள்ளது. அவரை காக்க வேண்டியது அரசின் கடமை. எனவே, சுதந்திரமான விசாரணை நடக்க இந்த வழக்கை வேறு அமைப்பிற்கு மாற்ற வேண்டும். வேறு மாநிலத்தில் வைத்து விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.