ஹத்ராஸ் பெண் மீதான பாலியல் வன்கொடுமை விவகாரம்: 3 காவல் அதிகாரிகள் இடைநீக்கம்

 

ஹத்ராஸ் பெண் மீதான பாலியல் வன்கொடுமை விவகாரம்: 3 காவல் அதிகாரிகள் இடைநீக்கம்

உத்தர பிரதேசம் ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான தலித் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். உறவினர்கள் யாரும் இல்லாமலேயே அவளது இறுதி சடங்கு அவளது சொந்த ஊரில் நேற்று அதிகாலை வேளையில் நடைபெற்றது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என அம்மாநில காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகவும், அம்மாநில காவல்துறையினருக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. மேலும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.

ஹத்ராஸ் பெண் மீதான பாலியல் வன்கொடுமை விவகாரம்: 3 காவல் அதிகாரிகள் இடைநீக்கம்

இந்நிலையில் ஹாத்ராஸ் பெண் மீதான பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடைய 5 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்படுவதாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.