கொரோனாவுடன் ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தை சந்தித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ… வழக்கு பதிவு செய்த உ.பி. போலீசார்..

கொரோனாவுடன் ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தை சந்தித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ… வழக்கு பதிவு செய்த உ.பி. போலீசார்..

கொரோனா வைரஸ் பாதிப்பு தனக்கு இருப்பது தெரிந்த பிறகும், ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மீது போலீசார் தொற்றுநோய் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, சிகிச்சை பலன் இன்றி இறந்துபோன 19 வயது பெண்ணின் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் தலைவர்களும் சந்தித்து வருகின்றனர். அது போன்று டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குல்தீப் குமாரும் ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்து விட்டு வந்தார். தற்போது அவர் மீது உத்தர பிரதேச போலீசார் தொற்றுநோய் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொரோனாவுடன் ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தை சந்தித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ… வழக்கு பதிவு செய்த உ.பி. போலீசார்..
குல்தீப் குமார்

கடந்த செப்டம்பர் 29ம் தேதியன்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குல்தீப் குமார் தனக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது என டிவிட்டரில் தகவல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கடந்த 4ம் தேதியன்று ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து அது தொடர்பான வீடியோவையும் டிவிட்டரில் போஸ்ட் செய்து இருந்தார்.

கொரோனாவுடன் ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தை சந்தித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ… வழக்கு பதிவு செய்த உ.பி. போலீசார்..
ஹத்ராஸ் பாதிக்கப்படட குடும்பத்தினருடன் குல்தீப் குமார்

இதனையடுத்து ஹத்ராஸ் போலீசார் தொற்றுநோய் சட்டத்தின்கீழ் குல்தீப் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோன வைரஸ் உறுதியான அடுத்த 5 நாட்களில் விதிமுறைகளை மீறி ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்ததோடு, அந்த குடும்பத்தையும் ஆபத்தில் தள்ளியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.