ராகுல்காந்தி மீது உ.பி போலீசார் தாக்குதல் ? பரபரப்பு புகைப்படங்கள்

 

ராகுல்காந்தி மீது உ.பி போலீசார் தாக்குதல் ? பரபரப்பு புகைப்படங்கள்

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் என்ற இடத்தில் தலித் பெண் கூட்டுப் பாலியல் வன்முறையில் உயிரிழந்த விவகாரம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

உயர்சாதி இந்துக்களால், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கழுத்து எலும்புகள் முறிக்கப்பட்டு அந்த பெண் கொல்லப்பட்டுள்ளார். இந்த அதிர்வலைகளையுடன், இன்று ராகுல்காந்தி மீது நிகழ்தப்பட்ட காவல்துறை அத்துமீறலும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல்காந்தி மீது உ.பி போலீசார் தாக்குதல் ? பரபரப்பு புகைப்படங்கள்

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையில், நாடே அதிர்ச்சி அடைந்துள்ளபோது, அதே மாநிலத்தில் , மீண்டும் இரண்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கு இந்தியா முழுவதும் கடும் கண்டனங்களை தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஹத்ராஸ் வன்கொடுமையில் உயிரிழந்த பெண்ணின் தந்தையுடன் தொலைபேசியில் பேசிய, ராகுல் தான் நேரில் வந்து சந்திப்பதாக கூறியிருந்தார். அதன்படி இன்று ஆறுதல் சொல்வதற்காக பிரியாங்கா, ராகுல் ஆகியோர் சென்றனர்.

டெல்லி உத்தரபிரதேச மாநிலங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் சென்றபோது, உ.பிக்குள் நுழைய விடாமல் காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஹத்ராஸ்க்கு செல்ல 142 கிலோ மீட்டரில் நொய்டாவிலேயே போலீசார் தடுத்து நிறுத்தியதால், காரில் இருந்து இறங்கி ஏராளமான தொண்டர்களுடன் ராகுல் நடக்கத் தொடங்கியுள்ளார்.

அப்போது, ராகுலை மேற்கொண்டு செல்ல விடாமல் போலீசார் தடுத்துள்ளனர். அப்போது, ராகுல்காந்தி கீழே தள்ளப்பட்டதாகவும்,லத்தியால் தாக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி மீது உ.பி போலீசார் தாக்குதல் ? பரபரப்பு புகைப்படங்கள்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூறிய ராகுல்காந்தி “போலீசார் தன்னை கீழே தள்ளி, லத்திசார்ஜ் செய்தார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

ராகுல்காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல், எதிர்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. இந்திய முழுவதும் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர்.