உன்னாவ் பாலியல் குற்றவாளியின் மனைவிக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்த பாஜக!

உன்னாவ் பாலியல் குற்றவாளியின் மனைவிக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்த பாஜக!

உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் மனைவி சங்கீதாவுக்கு உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்துள்ளது. தற்போது இவர் உன்னாவ் பஞ்சாயத்து தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உன்னாவ் பாலியல் குற்றவாளியின் மனைவிக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்த பாஜக!

நாட்டையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வன்முறை சம்பவத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தான் 17 வயது சிறுமியாக இருந்த போது தன்னை பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் 2017ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவு செய்தார் என்று புகார் அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

உன்னாவ் பாலியல் குற்றவாளியின் மனைவிக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்த பாஜக!

ஆரம்பத்தில் இவ்வழக்கை போலீஸார் கண்டுகொள்ளாததையடுத்து எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன. அதன்பின் நடவடிக்கை எடுக்க, லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இச்சூழலில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது வக்கீல் மற்றும் குடும்பத்தினருடன் காரில் சென்றபோது லாரி மோதியதில் அவரது உறவுக்கார பெண் மற்றும் வக்கீல் மகேந்திர சிங் ஆகியோர் உயிரிழந்தனர். அந்த இளம்பெண்ணும் அவரது தாயாரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர்.

உன்னாவ் பாலியல் குற்றவாளியின் மனைவிக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்த பாஜக!

இந்த விபத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கொல்வதற்கு நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் உள்ளிட்ட 9 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக உ.பி. போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணை காவலில் இருந்த அவர் திடீரென சிறைக்குள் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின.

உன்னாவ் பாலியல் குற்றவாளியின் மனைவிக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்த பாஜக!

விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த இளம்பெண் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் கற்பழிப்பு, விபத்து, கள்ளத்துப்பாக்கி வழக்கு, சிறை மரணம் மற்றும் அதன் தொடர்புடைய இதர வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகளையும் லக்னோ நீதிமன்றத்தில் இருந்து டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து செங்கார் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கட்சியை விட்டும் செங்கார் நீக்கப்பட்டிருந்தார்.