பசு, பகவத் கீதை மற்றும் கங்கை ஆகியவைதான் இந்தியாவின் அடையாளம்… உ.பி. அமைச்சர் தகவல்

பசு, பகவத் கீதை மற்றும் கங்கை ஆகியவைதான் இந்தியாவின் அடையாளம்… உ.பி. அமைச்சர் தகவல்

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு அண்மையில் பசுக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க பசு வதை தடுப்பு (திருத்த) சட்டம் 2020 அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு அம்மாநில அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது. இந்த அவசர சட்டத்தின்படி, முதல் முறை பசு கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 1 முதல் 7 ஆண்டுகள் வரை ஜெயில் மற்றும் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை என்றால் குற்றவாளிக்கு 10 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

பசு, பகவத் கீதை மற்றும் கங்கை ஆகியவைதான் இந்தியாவின் அடையாளம்… உ.பி. அமைச்சர் தகவல்

பசு வதை தடுப்பு (திருத்த) சட்டம் 2020 அவசர சட்டம் தொடர்பாக, உத்தர பிரதேச பால் வளத்துறை அமைச்சர் லட்சுமி நாரயன் சவுத்ரி கூறியதாவது: மாநிலத்தில் பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க ஏற்கனவே முன்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் மக்கள் திரை மறைவாக இதனை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தனர். இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

பசு, பகவத் கீதை மற்றும் கங்கை ஆகியவைதான் இந்தியாவின் அடையாளம்… உ.பி. அமைச்சர் தகவல்

பசு, பகவத் கீதை மற்றும் கங்கை ஆகியவைதான் இந்தியாவின் அடையாளம். நம் நாடு விஷ்வா குருவாக இருந்த நேரத்தில், பசு, பகவத் கீதை மற்றும் கங்கை ஆகிய மூன்றையும்தான் வணங்க மக்கள் பயன்படுத்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.