நாட்டுக்கு எதிராக நிற்பவர்கள் என்கவுண்டரில் கொல்லப்படுவார்கள்.. உ.பி. பா.ஜ.க. அமைச்சர்

 

நாட்டுக்கு எதிராக நிற்பவர்கள் என்கவுண்டரில் கொல்லப்படுவார்கள்.. உ.பி. பா.ஜ.க. அமைச்சர்

இந்தியாவுக்கு எதிராக யார் நிற்கறார்களோ அவர்கள் என்கவுண்டரில் கொல்லப்படுவார்கள் என்று உத்தர பிரதேச பா.ஜ.க. அமைச்சர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் வசித்து வரும் பிரபல உருது கவிஞர் முனாவ்வர் ராணா. இவர் அண்மையில், உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், நான் மாநிலத்தை விட்டு வெளியேறி வேறு எங்காவது செல்வது குறித்து பரிசீலிப்பேன் என்று தெரிவித்து இருந்தார். மேலும், எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். போன்ற கட்சிகள் மத அடிப்படையில் வாக்காளர்களை பிரிக்க மட்டுமே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டுக்கு எதிராக நிற்பவர்கள் என்கவுண்டரில் கொல்லப்படுவார்கள்.. உ.பி. பா.ஜ.க. அமைச்சர்
முன்னாவ்வர் ராணா

முன்னாவ்வர் ராணாவின் கருத்துக்கு அம்மாநில பா.ஜ.க. அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். உத்தர பிரதேசத்தின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை ஜூனியர் அமைச்சர் ஆனந்த ஸ்வரூப் சுக்லா கூறியதாவது: 1947ல் பிரிவினைக்கு (இந்தியா-பாகிஸ்தான்) பின்னர் இந்தியாவில் தங்கியிருந்தவர்களில் புகழ் பெற்ற கவிஞரும் (முனாவ்வர் ராணா) ஒருவர்.

நாட்டுக்கு எதிராக நிற்பவர்கள் என்கவுண்டரில் கொல்லப்படுவார்கள்.. உ.பி. பா.ஜ.க. அமைச்சர்
ஆனந்த ஸ்வரூப் சுக்லா

அவர் நம் நாட்டின் உள்ளேயே இருந்து கொண்டு நாட்டை பிளவுப்படுத்தும் சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற சூழ்நிலையில் இந்தியாவுக்கு எதிராக யார் நின்றாலும் என்கவுண்டரில் கொல்லப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால், உத்தர பிரதேசத்துக்கு வெளியே குடியேற தயாராகுங்கள் என்று முனாவ்வர் ராணாவுக்கு அகில் பாரதிய அகார பரிஷத் அமைப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.