கொரோனாவை காட்டிலும் பசி கொடியது…. மீண்டும் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடி செல்லும் உ.பி. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

கொரோனாவை காட்டிலும் பசி கொடியது…. மீண்டும் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடி செல்லும் உ.பி. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

கொரோனா வைரஸ் பிடியில் நம் நாடு சிக்கி தவிக்கிறது. மேலும் பொருளாதாரத்தையும் கொரோனா வைரஸ் உருக்குலைத்து விட்டது. லாக்டவுன் சமயத்தில் அனைத்து மாநிலங்களிலும் தொழில்துறை முடங்கியதால், பல்வேறு மாநிலங்களில் வேலை பார்த்து வந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுமார் 30 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். சொந்த ஊரில் வேலை வாய்ப்பு இல்லாததால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது கடுமையான நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.

கொரோனாவை காட்டிலும் பசி கொடியது…. மீண்டும் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடி செல்லும் உ.பி. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

பசியால் சாவதை காட்டிலும் கொரோனாவால் இறப்பது மேல் என்ற முடிவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பல லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடி செல்ல தொடங்கியுள்ளனர். கிழக்கு உத்தர பிரதேசத்தில் தியோரியா நகரம் உள்ளது. அங்கியிருந்து சுமார் 50 கி.மீட்டர் தொலைவில் கோரக்பூர் ரயில் நிலையம் உள்ளது. அந்த ரயில் நிலையிலத்திலிருந்து மகாராஷ்டிரா, குஜராத் உள்பட நாட்டின் பிற பகுதிகளுக்கு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

கொரோனாவை காட்டிலும் பசி கொடியது…. மீண்டும் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடி செல்லும் உ.பி. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

கோரக்பூர் ரயில் நிலையத்துக்கு செல்வதற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரசாத் தியோரியா பஸ்நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது முன்பு மும்பையில் வேலை பார்த்த புலம்பெயர்ந்த தொழிலாளியான குர்ஷீத் அன்சாரி செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், உத்தர பிரதேசத்தில் வேலை இருந்திருந்தால் நாம் திரும்பி போக மாட்டேன். என்னுடைய நிறுவனம் இன்னும் திறக்கவில்லை. ஆனால் என்னால் என்ன வேலை செய்ய முடியுமோ அந்த வேலையை தேடி மும்பைக்கு திரும்பி செல்கிறேன். பசியை காட்டிலும் கொரோனா வைரஸ் மேல். கொரோனா வைரஸால் என் குழந்தைகள் இறப்பதை விட நான் இறப்பது மேல் என தெரிவித்தார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் திவாகர் அன்சாரியின் மனநிலையில்தான் பல லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.