இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எடுத்தவர்களில் இருவர் திடீர் மரணம்

 

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எடுத்தவர்களில் இருவர் திடீர் மரணம்

இந்தியாவில் கடந்த 16ஆம் தேதி முதல், நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதல் நாளில் ‘கோவின்’ செயலின் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எடுத்தவர்களில் இருவர் திடீர் மரணம்

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியிலுள்ள 52 வயதான மருத்துவமனை ஊழியர் ஒருவருக்குக் கடந்த சனிக்கிழமை தடுப்பூசி அளிக்கப்பட்டது. அவர் கொரோனா தடுப்பூசி போட்ட அடுத்த நாளே உயிரிழந்தார். இதேபோல் கர்நாடகாவிலும் கொரோனா தடுப்பூசி எடுத்தவர் பேர் மரணமடைந்துள்ளனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவரின் மரணம் தடுப்பூசியால் நிகழவில்லை என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த 43 வயது நபர், தடுப்பூசி போட்ட 2வது நாளில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவை சேர்ந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேலும் டெல்லியில் 50க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் சுமார் 447 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 13, 962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1.05 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல நேற்று ஒரே நாளில் 145 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1.52 லட்சத்தைத் தாண்டியுள்ளது.