உ.பி 8 போலீசார் கொலை வழக்கில் தேடப்பட்ட விகாஸ் ம.பி-யில் கைது!

 

உ.பி 8 போலீசார் கொலை வழக்கில் தேடப்பட்ட விகாஸ் ம.பி-யில் கைது!

உத்தரப் பிரதேசத்தில் கைது செய்ய வந்த எட்டு போலீசாரை சுட்டுக் கொலை செய்த ரவுடி விகாஸ் தூபேயை மத்தியப் பிரதேசத்தில் வைத்து போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.

உ.பி 8 போலீசார் கொலை வழக்கில் தேடப்பட்ட விகாஸ் ம.பி-யில் கைது!உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்து வருகிறார். அங்குள்ள கான்பூரில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய விகாஸ் தூபோயை போலீசார் கைது செய்ய சென்றனர். அப்போது ரவுடி கும்பல் சுட்டத்தில் ஒரு டி.எஸ்.பி, மூன்று எஸ்.ஐ-க்கள் உள்பட எட்டு போலீசார் பலியாகினர். ஏழு போலீசார் படுகாயம் அடைந்தனர்.

உ.பி 8 போலீசார் கொலை வழக்கில் தேடப்பட்ட விகாஸ் ம.பி-யில் கைது!இதைத் தொடர்ந்து விகாஸ் தூபேயை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். விகாஸின் கூட்டாளிகள் கார்த்திகேயா எனப்படும் பிரபாத், பிரவீன் ஆகியோர் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். விகாஸ் தூபே மத்தியப் பிரதேசத்தில் தலைமறைவாக உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜய்னில் பதுங்கியிருந்த விகாஸ் தூபேயை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்ததாக செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இதை போலீஸ் உறுதி செய்யவில்லை.

உ.பி 8 போலீசார் கொலை வழக்கில் தேடப்பட்ட விகாஸ் ம.பி-யில் கைது!விகாஸ் தூபேயை போலீசார் கைது செய்ய வரும் தகவல் முன்னதாகவே போலீஸில் உள்ள உளவாளிகள் மூலமாக விகாசுக்கு தெரியவந்தது. இதனால்தான் தயார் நிலையிலிருந்து போலீசை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். விகாஸ் தூபேயை உயிரோடு பிடித்தால் பல முக்கிய பிரபலங்களுடன் அவனுக்கு உள்ள தொடர்புகள் வெளியே வரலாம். அதனால் விகாஸ் தூபே கைது செய்யப்பட வாய்ப்பில்லை, கைது செய்யப்பட்டாலும் உடனே அவன் என்கவுண்டர் செய்யப்படவே வாய்ப்பு அதிகம் என்று உ.பி தகவல்கள் தெரிவிக்கின்றன.