உ.பி மருத்துவர் கஃபீல் கான் மீதான வழக்கு ரத்து.. உடனே விடுதலை செய்ய வேண்டும்! – அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி

உ.பி மருத்துவர் கஃபீல் கான் மீதான வழக்கு ரத்து.. உடனே விடுதலை செய்ய வேண்டும்! – அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உ.பி மருத்துவர் கஃபீல் கான் மீதான வழக்கை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

உ.பி மருத்துவர் கஃபீல் கான் மீதான வழக்கு ரத்து.. உடனே விடுதலை செய்ய வேண்டும்! – அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி

உ.பி-யில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்தபோது, தன் செலவில் ஆக்சிஜன் வாங்கிக்கொடுத்து உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்தவர் டாக்டர் கஃபீல் கான். அதைத் தொடர்ந்து ஊடகங்களில் அவரைப் பற்றி உயர்வாக பதிவுகள் வெளியாகவே, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

உ.பி மருத்துவர் கஃபீல் கான் மீதான வழக்கு ரத்து.. உடனே விடுதலை செய்ய வேண்டும்! – அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அலிகார் இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக கடைசியாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து கஃபீல் கானின் தாயார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் கோவிந்த் மாத்தூர், சுமித்ரா தயால் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

உ.பி மருத்துவர் கஃபீல் கான் மீதான வழக்கு ரத்து.. உடனே விடுதலை செய்ய வேண்டும்! – அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி

இன்று இந்த வழக்கைகில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. கஃபீல் கான் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், கஃபீல் கானை உடனடியாக விடுவிக்க வேண்டும். தடுப்புக் காவலில் வைத்து அதை நீட்டித்தது சட்ட விரோதம் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.