உத்தர பிரதேச காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தி?.. 10 லட்சம் பிரியங்கா காந்தி பட காலண்டர் விநியோகம்

உத்தர பிரதேச காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தி?.. 10 லட்சம் பிரியங்கா காந்தி பட காலண்டர் விநியோகம்

2022 உத்தர பிரதேச தேர்தலை மனதில் வைத்து, மக்களை சென்றடையும் நோக்கில், அம்மாநில நகரங்கள் மற்றும் கிராமங்களில் வீடு வீடாக சென்று பிரியங்கா காந்தி பட காலண்டரை விநியோகம் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசின் ஆட்சிக் காலம் 2022 மார்ச் மாதத்தில் முடிவுக்கு வருகிறது. ஆகையால் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில், 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்பதில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இப்போதே அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

உத்தர பிரதேச காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தி?.. 10 லட்சம் பிரியங்கா காந்தி பட காலண்டர் விநியோகம்
காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து செயல்பட தொடங்கியுள்ளது. பிரியங்கா காந்தியின் படம் கொண்ட காலண்டரை மாநிலத்தின் கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்ய உள்ளது. 12 பக்கம் கொண்ட அந்த டேபிள்டாப் காலண்டரில் ஒவ்வொரு பக்கத்தில் பிரியங்கா காந்தியின் அரசியல் பயணம் தொடர்பான படம் இடம் பெற்றுள்ளது. முதல் கட்டமாக 10 லட்சம் காலண்டர்கள் உத்தர பிரதேச காங்கிரஸ் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தி?.. 10 லட்சம் பிரியங்கா காந்தி பட காலண்டர் விநியோகம்
பிரியங்கா காந்தி காலண்டனர்

2022 உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸின் முதல் வேட்பாளராக பிரியங்கா காந்தி முன்னிலைப்படுத்தபடலாம் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பை கட்டியெழுப்ப பல்வேறு மாவட்டங்களில் அந்த கட்சியின் தலைவர்கள் முகாமிட்டு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.