என்கவுண்டரில் 127 பேர் அவுட்… குற்றம் மற்றும் குற்றவாளிகளை அரசு சகித்து கொள்ளாது.. யோகி ஆதித்யநாத்

என்கவுண்டரில் 127 பேர் அவுட்… குற்றம் மற்றும் குற்றவாளிகளை அரசு சகித்து கொள்ளாது.. யோகி ஆதித்யநாத்

அரசாங்கம் குற்றம் மற்றும் குற்றவாளிகளை சகித்து கொள்ளாத கொள்கையை கொண்டுள்ளது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

1959ம் ஆண்டில் லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்கில் சீன ராணுவத்துக்கு எதிராக போராடி தங்களது உயிர்களை தியாகம் செய்த சி.ஆர்.பி.எப். வீரர்கிளின் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதியன்று போலீஸ் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டும் நேற்று போலீஸ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

என்கவுண்டரில் 127 பேர் அவுட்… குற்றம் மற்றும் குற்றவாளிகளை அரசு சகித்து கொள்ளாது.. யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் லக்னோவில் நடைபெற்ற போலீஸ் நினைவு தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் கூறியதாவது: எங்களது அரசாங்கம் குற்றம் மற்றும் குற்றவாளிகளை சகித்து கொள்ளாத கொள்கையை கொண்டுள்ளது.

என்கவுண்டரில் 127 பேர் அவுட்… குற்றம் மற்றும் குற்றவாளிகளை அரசு சகித்து கொள்ளாது.. யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேச போலீஸ்

இதன் விளைவாக கடந்த மார்ச் 20ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை என்கவுண்டரில் 125 குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2,607 பேர் காயம் அடைந்துள்ளனர். 2019-20ம் நிதியாண்டில் பணியில் உயிர் இழந்த உ.பி. காவல்துறையின் 9 காவல்துறையினருக்கு எனது அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.