Upல இருக்குறவன் down ஆவுறதும், downல இருக்குறவன் up ஆகுறதும் சகஜம்தானே!

 

Upல இருக்குறவன் down ஆவுறதும், downல இருக்குறவன் up ஆகுறதும் சகஜம்தானே!

சரி, கொஞ்சநாள் விட்டுப்பிடிக்கலாம் என பில்கேட்ஸ் நினைத்தாரோ என்னவோ, திடீரென விஸ்வரூபம் பார்ட் 2 எடுக்க ஆரம்பித்துவிட்டார். பார்ட் டூவில் சொதப்ப கேட்ஸ் என்ன கமலா? விட்டதெல்லாம் பிடிக்கும் வேகத்தில் பில்கேட்ஸ் இருக்க, பிடித்ததையெல்லாம் விட்டுப்போகும் கெட்டநேரம் போல பெசோஸுக்கு. இருவருக்கும் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் இப்போது வெறும் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்தான்.

தொடர்ந்து 20 வருடங்களாக உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை வைத்திருந்தவர் பில்கேட்ஸ். ஆனால், 2017ஆம் ஆண்டு ஒரு சின்னகேப்பில் உள்ளே பூந்து மிகச்சிறிய கால இடைவெளிக்கு அப்படத்தை தனதாக்கிக்கொண்டவர் அமேசானின் ஜெஃப் பெசோஸ். மிகக்குறைந்த கால அளவிற்கு உலகின் பணக்காரர் என்ற பெயரை வைத்திருந்த பெசோச், 2018ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை அதனை நிரந்தரமாக்கிக்கொண்டார். பெசோசின் சொத்துமதிப்பு ஒரு கட்டத்தில் 168 பில்லியன் டாலர்கள்வரை உயர்ந்தாலும், 2018ல் நிறைய இழந்துவிட்டார். ஒரே நாளில் 15 பில்லியன் டாலர் அளவுக்கு அவரின் சொத்துமதிப்பு குறைந்தது, விவாகரத்தான மனைவிக்கு அளித்த நஷ்ட ஈடு என பல்வேறு காரணங்களால் குறைந்தாலும், பெரிய பணக்காரர் என்ற பெயருக்கு பங்கள் வரவில்லை.

Bill Gates and Jeff Bezos

சரி, கொஞ்சநாள் விட்டுப்பிடிக்கலாம் என பில்கேட்ஸ் நினைத்தாரோ என்னவோ, திடீரென விஸ்வரூபம் பார்ட் 2 எடுக்க ஆரம்பித்துவிட்டார். பார்ட் டூவில் சொதப்ப கேட்ஸ் என்ன கமலா? விட்டதெல்லாம் பிடிக்கும் வேகத்தில் பில்கேட்ஸ் இருக்க, பிடித்ததையெல்லாம் விட்டுப்போகும் கெட்டநேரம் போல பெசோஸுக்கு. இருவருக்கும் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் இப்போது வெறும் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்தான். பெசோசின் தற்போதைய சொத்து மதிப்பு 109 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதேசமயம் பில்கேட்ஸினுடையது 105 பில்லியன்கள். சொந்த நிறுவத்தில் அவர்களுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு, பிற கம்பெனிகளில் இருவரும் செய்திருக்கும் முதலீடு மற்றும் அவற்றின் மதிப்பு இவற்றைக்கொண்டே அவர்களின் சொத்து மதிப்பு கணக்கிடப்படுகிறது.