தடுப்பூசி போடாத சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை; கொடைக்கானலில் கெடுபிடி!

 

தடுப்பூசி போடாத சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை; கொடைக்கானலில் கெடுபிடி!

கொடைக்கானல் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டு விட்டன. கடும் கட்டுப்பாடுகளுடன் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. குறிப்பாக, தடுப்பூசி செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான கொடைக்கானலிலும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும், தடையை மீறி பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமலேயே சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருகிறார்கள்.

தடுப்பூசி போடாத சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை; கொடைக்கானலில் கெடுபிடி!
in kod

இந்த நிலையில், தடுப்பூசி போடாத சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கொடைக்கானல் சுற்றுலாத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் கொடைக்கானலில் அதிகளவில் மக்கள் கூட்டம் கூடியுள்ளது. குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தடுப்பூசி சான்றிதழை சரிபார்த்த பிறகே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. தடுப்பூசி போடாதவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்புவதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருப்பது மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.