darbar
  • January
    17
    Friday

Main Area

Main



உன்னாவ்: உயிரோடு இருக்கும்போது தராத பாதுகாப்பை சமாதிக்கு தந்த போலீஸ்!

உன்னாவ்
உன்னாவ்

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் சமீபத்தில் தீவைத்து எரித்துக்கொள்ளப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகள் அந்த பெண்ணை தீவைத்து கொளுத்தினர். 
இந்த சம்பவத்தைக் கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஐதராபாத் என்கவுண்டர் போல இந்த நான்கு பேரையும் கொல்ல வேண்டும் என்றும் இறந்த பெண்ணின் தந்தை கதறுகிறார். தற்போது, இறந்த பெண்ணின் சமாதிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

unnav

குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலைத் தோண்டி எடுத்துவந்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவசர அவசரமாகக் களத்தில் இறங்கிய காவல் துறையினர் அந்த பெண்ணின் சமாதிக்கு சென்றுள்ளனர். அங்கு பெண்ணின் உறவினர்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, உடலை யாரும் தோண்டி எடுத்துவிடாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
பாலியல் வன்முறையில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவரும்போதே அந்த பெண்ணுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கும்படி கோரிக்கை எழுந்தது. அப்போது பாதுகாப்பு அளித்திருந்தால் அந்த பெண் உயிரோடு இருந்திருப்பார். ஆனால், அப்போது எல்லாம் விட்டுவிட்டு, செத்து புதைக்கப்பட்ட உடலுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பது அந்த கிராம மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.