செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும்- மத்திய அரசு

 

செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும்- மத்திய அரசு

நாடு முழுவதும் பொது முடக்கம் செப்டம்பர் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

UNLOCK 4.0 என்ற பெயரில் தளர்வுகள் தொடர்பான புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

4ஆம் கட்ட தளர்வுகள் விவரம்

நாடு முழுவதும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது.

செப்.21 ஆம் தேதி முதல் அரசியல், விளையாட்டு, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை பங்கேற்கலாம்.

செப்.21 ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50% ஆசிரியர்கள் பணியாளர்களை பள்ளிக்கு அழைக்கலாம்.

செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும்- மத்திய அரசு

செப்.21 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும்.

திறந்த வெளி திரையரங்கம் செப்.21ம் தேதி முதல் செயல்படும்.

9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம்; ஆனால் கட்டாயமல்ல

மாநிலங்கள், மாவட்டங்கள் இடையே மக்கள் சென்றுவர முழு அனுமதி உண்டு. இ-பாஸ் மாதிரியான சிறப்பு அனுமதி தேவையில்லை.

Containment zone தவிர மற்ற இடங்களில் ஊரடங்கை அமல்படுத்த மாநிலங்களுக்கு உரிமை இல்லை என்றும், அப்படி அமல்படுத்த வேண்டுமானால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.