இந்தியாவில் அன்லாக் 2.0 தொடங்கிவிட்டது – பிரதமர் நரேந்திர மோடி

 

இந்தியாவில் அன்லாக் 2.0 தொடங்கிவிட்டது – பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு தற்போது வரை பல மாநிலங்களில் நீடித்து வருகிறது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் பல்வேறு தொழில்கள் முடங்கியது. அதனை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் அன்லாக் 1.0வை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து இன்று அன்லாக் 2.0வை குறித்து நம் நாட்டின் பிரதமர் மக்களிடம் காணொளி வாயிலாக உரையாற்றி வருகிறார்.

இந்தியாவில் அன்லாக் 2.0 தொடங்கிவிட்டது – பிரதமர் நரேந்திர மோடி

அப்போது பேசிய அவர், பொதுமுடக்கத்தின் 2 ஆம் கட்டமான அன்லாக் 2.0 தொடங்கி விட்டதாகவும் நாம் கொரோனாவை எதிர்த்து போராடும் இந்த சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மக்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மழை காலத்தில் சளி, காய்ச்சல் ஏற்படுவது சகஜம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து சரியான நேரத்தில் பொதுமுடக்கம் போடப்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் மற்ற நாடுகளை விட இந்தியா சரியான முறையில் கொரோனாவை எதிர்கொண்டு வருவதாகவும் பொதுமுடக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் மக்கள் அஜாக்கிரதையாக இருந்ததை பார்க்க முடிந்ததாகவும் தளர்வுகள் இருந்தாலும் எச்சரிக்கை அவசியம் என்றும் கூறினார். மேலும், பொதுமக்களுக்கு 5 மாதங்களுக்கு தேவையான பொருட்களை வழங்க ரூ.90,000 கோடி செலவிடப்படும் என்றும் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் சென்றைடையும் என்றும் கூறினார்.