’டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விவசாயிகளுக்கு உதவுகிறது’ விளக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்

’டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விவசாயிகளுக்கு உதவுகிறது’ விளக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்

கல்வியில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் மாற்றம் நிகழும். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக கல்வியில் டிஜிட்டல் நுழைந்தது, நாம் கனவில் கண்ட மாற்றங்கள் எல்லாம் நடக்க ஆரம்பித்துவிட்டன.

உயர்கல்வியில் டிஜிட்டல்மயமக்கல் பற்றி குறித்து, சேலம், பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர். டாக்டர். பி.குழந்தை வேல் விளக்கினார்.

’டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விவசாயிகளுக்கு உதவுகிறது’ விளக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்

“உயர் கல்வியில் டிஜிட்டல்மயமாக்கல் வெளிப்படைத்தன்மைக்கு வழி வகுத்து ஊழலைத் தடுக்கிறது. டிஜிட்டல்மயமாக்கல் மூலம் உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் நடத்தும் இணையக் கருத்தரங்குகளில் நம்மால் கலந்து கொண்டு அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது. கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இந்திய அரசு கவனம் செலுத்துகிறது.

’டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விவசாயிகளுக்கு உதவுகிறது’ விளக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்

டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. பல்வேறு நகரங்களின் விலை வித்தியாசங்களைப் பற்றி விவசாயிகளுக்கு முன்பெல்லாம் தெரியாது.

ஆனால் தற்போது, டிஜிட்டல் சந்தைப்படுத்துதலின் உதவியோடு, உதாரணத்துக்கு சேலத்தில் அல்லது கோயமுத்தூரில் இருக்கும் ஒரு விவசாயி, தனது பொருளுக்கு மகாராஷ்டிராவில் என்ன விலை என்பதைத் தெரிந்து கொண்டு, அதன் மூலம் சிறந்த விலைக்குத் தனது பொருளை விற்க முடியும்.

டிஜிட்டல் சந்தைப்படுத்துதலின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் குறித்த தொழில் சார்ந்த படிப்புகளை பெரியார் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தும் திட்டங்கள் உள்ளன.

’டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விவசாயிகளுக்கு உதவுகிறது’ விளக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்

மென்பொருள் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத் தொழில்நுட்பம் தொடர்பான ‘இண்டஸ்ட்ரி 4.0’-இன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு, திறன் சார்ந்த படிப்புகளுக்கு பல்கலைக்கழகம் அதிக முக்கியத்துவத்தை வழங்குகிறோம்.

நாட்டிற்கும், நமது விஞ்ஞானிகளுக்கும் இண்டஸ்ட்ரி 4.0 மிகவும் முக்கியமானதாகும். எனவே, மிகைப்படுத்தப்பட்ட மெய்மம் (Augmented Reality) மற்றும் மெய்நிகர் மெய்மம் (Virtual Reality) தொழில்நுட்பங்கள் பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் வெகுஜனத் தொடர்புத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.