திலீபனுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்திய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள்

திலீபனுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்திய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள்

இன்று திலீபன் உயிர்நீத்த தினம்.  இந்தியாவில் அண்டை நாடான இலங்கையில் தமிழர் உரிமைக்காக பல்வேறு குழுக்கள் போராடின. சில அகிம்சை ரீதியாகவும் சில ஆயுதக் குழுக்களாகவும். ஆயுதக்குழுக்களில் முதன்மையாக இருந்தது விடுதலைப் புலிகள்.

இலங்கையில் அமைதியை நிலைநாட்ட, இந்தியாவிலிருந்து அமைதிப் படை சென்றிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த திலீபன், இந்திய அமைதிப்படையை இலங்கையிலிருந்து வெளியேறச் சொல்லி உண்ணாவிரதம் இருந்தார். 12 நாட்கள் நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து இறந்துபோனார் திலீபன்.

திலீபனுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்திய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள்

அவரின் நினைவேந்தலுக்கு இலங்கை காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. சில நாட்களுக்கு முன் செஞ்சோலை நினைவஞ்சலிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்புகள் வெளிவந்தன.

திலீபனுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்திய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள்

பல்வேறு தடைகள் இருந்தபோதிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் திலீபனுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார். இன்றைக்கு திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார். இதனை எழுத்தாளர் வாசு முருகவேல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.