இந்திய-சீன எல்லை பிரச்சினைக்கு அமைதியான தீர்வுக்கு ஆதரவு அளிப்போம்… மீண்டும் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா

இந்திய-சீன எல்லை பிரச்சினைக்கு அமைதியான தீர்வுக்கு ஆதரவு அளிப்போம்… மீண்டும் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா

லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் கடந்த மாதம் இந்திய-சீன வீரர்கள் கை கலப்பில் ஈடுபட்டனர். இதனால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து வழக்கம்போல், எல்லை பிரச்சினையில் இந்தியா-சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தார். ஆனால் சீனாவுடான இருதரப்பு பிரச்சினையில் (எல்லை விவகாரம்) எந்தவொரு மூன்றாவது நபருக்கு இடமில்லை என மத்திய அரசு தெளிவாக கூறிவிட்டது. அதன்பிறகு அமெரிக்கா கொஞ்சம் பேசாமல் இருந்தது.

இந்திய-சீன எல்லை பிரச்சினைக்கு அமைதியான தீர்வுக்கு ஆதரவு அளிப்போம்… மீண்டும் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா

இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் கல்வான் பகுதியில் இந்திய-சீன வீரர்கள் உடல் ரீதியாக தாக்கி கொண்டனர். இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த செய்தி தெரிந்தவுடன் அமெரிக்கா வழக்கம் போல் மூக்கை நுழைத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது: எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய மற்றும் படைகளின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

இந்திய-சீன எல்லை பிரச்சினைக்கு அமைதியான தீர்வுக்கு ஆதரவு அளிப்போம்… மீண்டும் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா

இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் பதற்றத்தை தணிக்க விரும்புவதை வெளிப்படுத்துகின்றன. தற்போதைய நிலவரத்துக்கு அமைதியான தீர்வை நாங்கள் ஆதரிப்போம். 20 வீரர்கள் இறந்ததாக இந்திய ராணுவம் அறிவித்ததை நாங்கள் கவனித்தோம். எங்களது ஆழ்ந்த இரங்கலை அவர்களது குடும்பத்துக்கு தெரிவிக்கிறோம். கடந்த 2ம் தேதியன்று அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் போனில் பேசியபோது இந்திய-சீன எல்லை குறித்து ஆலோசனை செய்தார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.