சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு ஐக்கிய அமீரகம் அனுமதி

 

சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு ஐக்கிய அமீரகம் அனுமதி

கொரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. இதை எவ்வாறு எதிர்கொள்வது என உலக நாடுகள் திண்டாடுகின்றன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 94 லட்சத்து  45 ஆயிரத்து 688 பேர்.  3 கோடியை  விரைவாக நெருங்கி வருகிறது.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 12 லட்சத்து 79 ஆயிரத்து 833 நபர்கள்.

சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு ஐக்கிய அமீரகம் அனுமதி

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 32 ஆயிரத்து 744 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு எனும் நிலைக்கு உலகம் சென்றுகொண்டிருக்கிறது.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவின் கேமாலியா நிறுவனம் தயாரித்துவிட்டது. அதை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது. இந்த மருந்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பப்படும் என்பதை அறிந்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், ஸ்புட்னிக் 5 எனும் பெயரிட்ட அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே போடச் சொன்னார்.

சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு ஐக்கிய அமீரகம் அனுமதி
Neal Browning receives a shot in the first-stage safety study clinical trial of a potential vaccine for COVID-19, the disease caused by the new coronavirus, Monday, March 16, 2020, at the Kaiser Permanente Washington Health Research Institute in Seattle. Browning is the second patient to receive the shot in the study. (AP Photo/Ted S. Warren)

உலகில் முதன்நாடாக கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது ரஷ்யா. அடுத்த நாடாக ஐக்கிய அமீரகம் அனுமதி அளித்துள்ளது.

சீன நாட்டின் சீனோ ஃபார்ம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இரண்டு கட்ட பரிசோதனைகள் வெற்றிக்கரமாக முடிவடைந்துள்ளன. அந்த மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர்களுக்கு மிகச் சிறிய அளவிலான பாதிப்பே ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மூன்றாம் கட்ட பரிசோதனை இன்னும் முடிவடைய வில்லை.

சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு ஐக்கிய அமீரகம் அனுமதி

இந்நிலையில் ஐக்கிய அமீர்கரத்தில் கொரோனா தடுப்பு முன்கள வீரர்களுக்கு சீனோ ஃபார்ம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியைப் போட அனுமதி அளித்துள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு 81 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 399 பேர் கொரோனாவால் இறந்துவிட்டார்கள். அதனால் ஐக்கிய அமீரகம் இந்த அனுமதியை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.