“இந்துக்கள் மனசு புண்படுது; எல்லாரும் அமேசான் பிரைம ‘யுனிஸ்டால்’ செய்யுங்க” – குழம்ப வேண்டாம் உள்ள வந்து படிங்க!

 

“இந்துக்கள் மனசு புண்படுது; எல்லாரும் அமேசான் பிரைம ‘யுனிஸ்டால்’ செய்யுங்க” – குழம்ப வேண்டாம் உள்ள வந்து படிங்க!

வழக்கமாக ஒரு படத்திற்கு ப்ரீ பிரமோஷன் செய்யும் இந்து அமைப்புகள் அப்கிரேட் ஆகி அமேசான் பிரைம் செயலிக்கு பிரமோஷன் செய்திருக்கின்றன. அமேசான் பிரைம் செயலியை இன்ஸ்டால் எண்ணிக்கை உயர்ந்துகொண்டிருப்பதாக தகவல் வந்த வண்ணமே உள்ளன. இன்னும் சில தினங்களில் வசூல் விவரங்களை அமேசான் நிறுவனம் வெளியிடும் என அவதானிக்கப்படுகிறது.

பிரபலமாகாத ஒரு படத்தையோ, வெப் சீரிஸையோ பிரபலமாக்குவதையே தலையாய கடமையாகச் செய்துவருகின்றன இந்து அமைப்புகள். இவர்கள் இந்துக்களின் மத உணர்வுகளை அந்தப் படங்கள் புண்படுத்துவதாக போராட்டம் நடத்தினால், அதில் போட்ட காசை விட பன்மடங்கு லாபம் பார்க்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

“இந்துக்கள் மனசு புண்படுது; எல்லாரும் அமேசான் பிரைம ‘யுனிஸ்டால்’ செய்யுங்க” – குழம்ப வேண்டாம் உள்ள வந்து படிங்க!

இது தவிர்த்து மத்திய அரசை விமர்சித்திருந்தால், சும்மா இல்லாமல் பாஜக ஆசாமிகள் ஊதி பெரிதாக்கி தயாரிப்பாளர்களை கல்லா கட்ட வைப்பார்கள். தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த உதாரணம் மெர்சல் திரைப்படம். ஆரம்பத்தில் மெர்சல் படம் விஜய் ரசிகர்களைத் தவிர்த்து வெகுஜனத்திடம் வரவேற்பு பெறவில்லை. ஹெச். ராஜா வாய் விட ஏகபோகமாக 100 கோடி வசூலை வாரிக் குவித்தது மெர்சல்.

ஆரம்ப காலங்களில் இந்த ப்ரீ பிரமோஷன் அரிதான ஒன்றாக இருந்தது. தற்போது கொரோனா போல மக்களின் அன்றாட வாழ்க்கையோடு கலந்துவிட்டது. “இந்துக்கள் மனம் புண்படுதுனு சொல்றாங்களே தவிர, அந்த இந்துக்கள் யாருனு தெரியவே மாட்டிகிது” என்ற பாணியிலேயே நம்மாட்கள் இதனை டீல் செய்வார்கள் (ரொம்ப புண்படுத்தாதீங்கப்பா). வெந்த புண்ணுல வேல் பாய்ச்சிறதே இவங்களுக்கு வேல.

தற்போது வெப் சீரிஸ் ஒன்று புண்படுபவர்களின் கையில் சிக்கியிருக்கிறது. அமேசான் பிரைமில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.15) ரிலீஸான ‘தாண்டவ்’ வெப் சிரீஸே அது. சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அலி அப்பாஸ் ஸாஃபர் தயாரித்து இயக்கிருக்கிறார்.

இந்த சீரிஸில் தான் அந்த இந்துக்கள புண்படுத்திருங்களாம். நாட்டில் நடப்பதை படமாக எடுத்தால் ஏன் புண்படுகிறது என்று தெரியவில்லை என நெட்டிசன்கள் சர்காஸ்டிக்காக கலாய்த்துவருகின்றனர். இந்த சீரிஸை தடை செய்ய வேண்டும் என இந்து அமைப்பினர் மட்டுமல்லாமல், பாஜக எம்எல்ஏ ஒருவரே புகார் கொடுத்திருந்தார். ஆங்காங்கே சிறு போராட்டங்களும் நடைபெற்றன (அப்படியா என்று கேட்காதீர்கள்… நம்புங்க அது போராட்டம் தான்).

https://twitter.com/MuhammadAarif_7/status/1351841647630315524

அதெல்லாம் தூக்க முடியாது என்று அமேசான் மறைமுகமாக கூற, அந்தச் செயலியை அனைவரும் ‘யுனிஸ்டால்’ செய்யுங்க என்று இந்து அமைப்பினரும் பாஜகவினரும் ட்விட்டரில் டிரெண்ட் செய்கின்றனர். யுனிஸ்டாலா அப்படி ஒரு வார்த்தைய கேள்விபட்டதே இல்லையே அப்படினு கேக்காதீங்க… நாட்ல என்ன டிரெண்டாகுதோ அத தான சொல்ல முடியும். (இத இந்த வெளிநாட்டுக்காரன் பாத்தா நம்மள என்ன நினப்பான்)

ஆமாங்க, அன்இன்ஸ்டால் பண்ணுங்க அப்படின்றத தான் அப்படி ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் பண்ணிட்டு இருக்காங்க. ‘Uninstall’ ஆ ‘Unistall’ ஆ… பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு. நல்ல வேளை மோடி ஜீயை பெருமைப்படுத்துகிறேன் என்ற பெயரில் டீ ஸ்டால் என டிரெண்ட் செய்யாமல் விட்டார்களே. அதுவரையில் நாம் தப்பித்தோம்.

https://twitter.com/MurraadC/status/1351841987024936962

இதன் மூலம் இந்தியாவிற்கு கோயில்கள் தேவையில்லை; ஏராளமான பள்ளிக்கூடங்களே தேவை என்பது உறுதியாகியிருப்பதாக நெட்டிசன்கள் பகடி செய்துவருகின்றனர். ச்ச… இது தெரியாம அயோத்தில ராமர் கோவிலாம் கட்டுராங்களே என்று சிலர் நொந்துகொண்டுள்ளனர்.

“எனது அருமை இந்துச் சொந்தங்களே அனைவரும் ஏகாதிபத்திய அமேசான் செயலியை யுனிஸ்டால்… ச்ச அன்இன்ஸ்டால் செய்து உங்களது எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்”… இத நான் சொல்லலீங்க இந்து அமைப்புகள் சொன்னது… செய்வீர்களா… செய்வீர்களா… (ஆயிரம் ரூபா மெம்பர்ஷிப் காசு உங்கொ….னா கொடுப்பானு நீங்க கேக்குறது புரிகிறது)