பாட்ரோல் பாயின்ட் 14 இன்னும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது… மத்திய அமைச்சர் தகவல்

இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதியும், தற்போதைய மத்தியஅமைச்சருமான வி.கே. சிங் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்திய எல்லைக்குள் நுழைந்ததால் கைது செய்யப்பட்ட சீன வீரர்களை இந்தியாவும் விடுவித்துள்ளது. இந்தியாவுடன் இருந்த கல்வான் பள்ளத்தாக்கின் பகுதி தொடர்ந்து நம் கட்டுப்பாட்டில் உள்ளது. மோதலின் முக்கிய பகுதியான பாட்ரோல் பாயின்ட் 14 இன்னும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பாட்ரோல் பாயின்ட் 14

கல்வான் பள்ளதாக்கின் ஒரு பகுதி அவர்கள வசம் உள்ளது. அதேசமயம் நம் பக்கத்தில் உள்ள பகுதி தொடர்ந்து நம் கட்டுப்பாட்டில் உள்ளது. 1962 முதல் சீனா அந்த பகுதியில் அமர்ந்துள்ளது. இங்கு (இந்திய வீரர்கள்) 20 பேர் கொல்லப்ட்டார்கள் என்றால் அங்கு (சீன வீரர்கள்) இந்திய தரப்பை காட்டிலும் 2 மடங்கு உயிர் இழப்பு ஏற்பட்டு இருக்கும்.

வாகனத்தில் செல்லும் ராணுவ வீரர்கள்

நாம் நம் பக்கத்தில் இருந்தோம் அவர்கள் அவர்களது பகுதியில் இருந்தார்கள். சிலர் நம் பகுதியிலிருந்து அங்கு சென்றார்கள் மற்றும் அதேபோல் அவர்களும் வந்தார்கள். ஒவ்வொருவரும் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதால் நாங்கள் அனைத்து விவரங்களையும் வெளியிடவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Most Popular

“ரூ.1.25 கோடி மதிப்பிலான”..வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் குட்கா பறிமுதல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு புறம் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டதில் இருந்து இந்த போதை பொருட்கள் அதிகரித்து வருகிறது என்றே...

“குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் 9 பால் பாக்கெட்டுகளும் சிதறிக் கதறுகிறது” : எஸ்.வி. சேகரை கலாய்க்கும் தயாநிதி மாறன்

மும்மொழிக்கொள்கைக்கு முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.வி.சேகர், “நீங்கள் நன்றாக இந்தி பேசுகிறீர்கள். பின்னர் ஏன் தமிழ்நாட்டு...

கணவனை பிரிந்தார் ,பெற்ற குழந்தையை விற்றார் -மும்பை போகும் கனவில் ஒரு பெண் செய்த வேலைய பாருங்க

கிராமத்தில் வாழ விரும்பாத ஒரு பெண்,மும்பை போகும் ஆசையில்  தன்னுடைய கணவனை பிரிந்து ,பெற்ற குழந்தையை விற்ற போது பிடிபட்டார். ஹைதராபாத்தில் உள்ள ஹபீப்நகர் பகுதியில் 22 வயதான ஷேக் சோயா கான் என்ற...

இண்டர்வியூவை எளிதாக எதிர்கொள்ள உதவும் 10 விஷயங்கள்

கொரோனா நோய்த் தொற்றால் ஏராளமான வேலை இழப்புகள் பற்றிய செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன. 2020 டிசம்பருக்குள் கோடிக்கணக்கில் வேலை இழப்புகள் இருக்கும் என விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வேலை இழந்த ஒவ்வொருவருமே அடுத்த...
Do NOT follow this link or you will be banned from the site!