இந்தியாவில் வசிக்க மெகபூபா முப்திக்கும், பரூக் அப்துல்லாவுக்கும் உரிமை இல்லை… மத்திய அமைச்சர் ஆவேசம்

 

இந்தியாவில் வசிக்க மெகபூபா முப்திக்கும், பரூக் அப்துல்லாவுக்கும் உரிமை இல்லை… மத்திய அமைச்சர் ஆவேசம்

ஜம்மு அண்டு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தியும், பரூக் அப்துல்லாவும் இந்தியாவில் வசிக்க எந்த உரிமையும் இல்லை என்று மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தார்.

ஜம்மு அண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், ஜம்மு அண்டு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி உள்பட மொத்தம் 7 கட்சிகள் இணைந்து குப்கர் அறிக்கைக்கான கூட்டணியை அண்மையில் உருவாக்கின.

இந்தியாவில் வசிக்க மெகபூபா முப்திக்கும், பரூக் அப்துல்லாவுக்கும் உரிமை இல்லை… மத்திய அமைச்சர் ஆவேசம்
பிரல்ஹாத் ஜோஷி

இந்த சூழ்நிலையில், மெகபூபா முப்தியும், பரூக் அப்துல்லாவும் இந்தியாவில் வசிக்க எந்த உரிமையும் இல்லை என்று மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார். பிரல்ஹாத் ஜோஷி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: ஜம்மு அண்டு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்திக்கும், ஜம்மு அண்டு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவுக்கும் இந்தியாவில் வசிக்க எந்த உரிமையும் இல்லை. நம்மை சீனா தாக்க முயற்சி செய்து கொண்டிருக்கும்வேளையில், அவர்களில் ஒருவர் சொல்கிறார் சீனாவின் ஆதரவுடன் நாங்கள் சட்டப்பிரிவு 370ஐ மீட்டெடுப்போம் என்று கூறுகிறார். சர்வதேச சமுதாயத்துக்கு எந்தமாதிரியான செய்தியை கொடுக்க போகிறீர்கள்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் வசிக்க மெகபூபா முப்திக்கும், பரூக் அப்துல்லாவுக்கும் உரிமை இல்லை… மத்திய அமைச்சர் ஆவேசம்
உமர் அப்துல்லா

ஜம்மு அண்டு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கான புதிய நிலச்சட்டங்களுக்கான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. அதில் ஜம்மு அண்டு காஷ்மீரில் 26 சட்டங்களை மாற்றி அல்லது ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இனி நாட்டின் எந்தகுடிமகனும் காஷ்மீரில் நிலங்களை வாங்கலாம். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா விமர்சனம் செய்துள்ளார். இது ஒரு வஞ்சம் மற்றும் நம்பிக்கையை மீறுவது என்று உமர் அப்துல்லா குறிப்பிட்டார்.