மாணவர்களுக்கு லேப்டாப், லவ்ஜிஹாத்துக்கு முடிவு.. கேரள பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

மாணவர்களுக்கு லேப்டாப், லவ்ஜிஹாத்துக்கு முடிவு.. கேரள பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. அதில் மாணவர்களுக்கு லேப்டாப், லவ்ஜிஹாத்துக்கு முடிவு போன்ற பல்வேறு வாக்குறுதிகளை பா.ஜ.க. அளித்துள்ளது.

கேரளாவில் 140 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டபேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. கேரள மக்களுக்கு பா.ஜ.க. அளித்துள்ள சில வாக்குறுதிகள் இதோ:

மாணவர்களுக்கு லேப்டாப், லவ்ஜிஹாத்துக்கு முடிவு.. கேரள பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
லேப்டாப்

சபரிமலை கோயிலுக்கா புதிய சட்டம் இயற்றப்படும்
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர் இலவசம்
குறைந்தபட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு
உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் இலவசம்
கேரளாவில் லவ்ஜிஹாத் முடிவுக்கு கொண்டு வரப்படும்
அனைத்து துறைகளிலும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்

மாணவர்களுக்கு லேப்டாப், லவ்ஜிஹாத்துக்கு முடிவு.. கேரள பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
சபரிமலை

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை முற்போக்கான, ஆற்றல்மிக்க, அபிலாஷை மற்றும் வளர்ச்சி சார்ந்த அறிக்கை என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மேலும், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்தாலும் அது காங்கிரஸ்கட்சிக்குதான் செல்லும், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தாலும் அது கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் செல்லும். இடதுசாரி அரசின் உண்மையான முகம் சபரிமலை விவகாரத்தில் வெளியானது என்று தெரிவித்தார்.