சட்டப்பிரிவு 370 ரத்து.. காஷ்மீர் வளர்ச்சிக்காக பல தசாப்தங்களாக இருந்த இருளை மோடி நீக்கினார்.. பியூஸ் கோயல்

சட்டப்பிரிவு 370 ரத்து.. காஷ்மீர் வளர்ச்சிக்காக பல தசாப்தங்களாக இருந்த இருளை மோடி நீக்கினார்.. பியூஸ் கோயல்

ஜம்மு அண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்யப்பட்டு நேற்றோடு ஒராண்டு முடிவடைந்து விட்டது. அதனை முன்னிட்டு நேற்று, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் டிவிட்டரில், சமானிய மக்களுக்கு நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை பெறுதல். ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் வளர்ச்சி மற்றும் வாய்ப்புக்களை கொண்டு வருவதற்காக நரேந்திரமோடி ஜி பல தசாப்தங்களாக இருந்த இருளை நீக்கினார்.

சட்டப்பிரிவு 370 ரத்து.. காஷ்மீர் வளர்ச்சிக்காக பல தசாப்தங்களாக இருந்த இருளை மோடி நீக்கினார்.. பியூஸ் கோயல்

சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி ஒருங்கிணைந்த நாடு மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்கள் தங்களது எதிர்காலத்தை வடிவமைக்க அதிகாரம் அளித்தார் என பதிவு செய்து இருந்தார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அங்குள்ள மக்களும் மற்ற இந்திய குடிமக்கள் போல் அனைத்து உரிமைகள் மற்றும் பலன்களையும் பெற வேண்டும் என பல பத்தாண்டுகளாக கோரிக்கை நிலவி வந்தது.

சட்டப்பிரிவு 370 ரத்து.. காஷ்மீர் வளர்ச்சிக்காக பல தசாப்தங்களாக இருந்த இருளை மோடி நீக்கினார்.. பியூஸ் கோயல்

இந்த சூழ்நிலையில் 2019 ஆகஸ்ட் 5ம் தேதியன்று அதுவரை ஜம்மு அண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 ஐ பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.