அரசியல் செய்வதை நிறுத்தி பொறுப்புடன் செயல்படுங்க.. உத்தவ் தாக்கரேவுக்கு பதிலடி கொடுத்த பியூஸ் கோயல்

 

அரசியல் செய்வதை நிறுத்தி பொறுப்புடன் செயல்படுங்க.. உத்தவ் தாக்கரேவுக்கு பதிலடி கொடுத்த பியூஸ் கோயல்

மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் மோடி தீவிரமாக இருப்பதாக குற்றம் சாட்டிய மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அலுவலகத்துக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பதிலடி கொடுத்தார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநிலத்தில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவிர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தலையிடக்கோரி பிரதமர் மோடியை தொலைப்பேசியில் அழைத்ததாகவும், ஆனால் தேர்தல் பிரசாரத்துக்காக மோடி மேற்கு வங்கத்தில் இருப்பதால் இப்போது அவருடன் பேச முடியாது என்றும், பின்னர் மோடி தாக்கரேவை திரும்ப அழைப்பார் என்றும் பிரதமர் அலுவலகம் கூறியதாக மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

அரசியல் செய்வதை நிறுத்தி பொறுப்புடன் செயல்படுங்க.. உத்தவ் தாக்கரேவுக்கு பதிலடி கொடுத்த பியூஸ் கோயல்
பிரதமர் மோடி

அதாவது தற்போதைய கொரோனா இடர்பாடு காலத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி மும்முரமாக உள்ளார் என்று மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகம் மறைமுகமாக தாக்கியது. இதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடாபாக அவர் டிவிட்டரில், ஆக்சிஜனில் உத்தவ் தாக்கரே அலுவலகத்தின் வித்தைகளை பார்க்க வருத்தமாக இருக்கிறது. மத்திய அரசு அனைதது பங்குதாரர்களுடனும், இந்தியாவில் அதிகபட்ச ஆக்சிஜன் உற்பத்தியை உறுதி செய்கிறது.

அரசியல் செய்வதை நிறுத்தி பொறுப்புடன் செயல்படுங்க.. உத்தவ் தாக்கரேவுக்கு பதிலடி கொடுத்த பியூஸ் கோயல்
பியூஸ் கோயல்

நாம் தற்போது 110 சதவீத ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறனில் உற்பத்தி செய்கிறோம். கிடைக்கக்கூடிய அனைத்து ஆக்சிஜனையும் தொழில்துறை பயன்பாட்டிலிருந்து மருத்துவ பயன்பாட்டுக்கு திருப்பப்படுகிறது. நேற்று முன்தினம்தான் பிரதமர் தனது ஆய்வு கூட்டத்தில் இந்த நெருக்கடியான காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் செயல்படவேண்டும் என்று கூறினார். இந்த பின்னணியுடன், உத்தவ் தாக்கரே அலுவலகம் அற்ப அரசியல் விளையாடுவதை கண்டு அதிர்ச்சியும், சோகமும் ஏற்பட்டது. வெட்கமில்லாத இந்த அரசியலின் தினசரி அளவை அவர் நிறுத்தி பொறுப்பாக செயல்பட வேண்டும் என பதிவு செய்துள்ளார்.