காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கியது நீக்கியதுதான்… ஒரு போதும் திரும்பி வராது… பா.ஜ.க. அமைச்சர் உறுதி

காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கியது நீக்கியதுதான்… ஒரு போதும் திரும்பி வராது… பா.ஜ.க. அமைச்சர் உறுதி

காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 போய் விட்டது, அது ஒரு போதும் திரும்பி வராது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுடன் 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. புட்கமில் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பேசுகையில் கூறியதாவது: பரூக் அப்துல்லா சீனாவின் உதவியை கேட்பேன் என்கிறார்.

காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கியது நீக்கியதுதான்… ஒரு போதும் திரும்பி வராது… பா.ஜ.க. அமைச்சர் உறுதி
அனுராக் தாக்கூர்

பாகிஸ்தானின் உதவியை கேட்பேன் என்று சொல்கிறார் மெகபூபா முப்தி. அந்த நாடுகள் நமக்கு தீவிரவாதத்தை கொடுத்தன. காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ கொண்டு வருவோம் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், சட்டப்பிரிவு 370 என்றோ போய்விட்டது, ஒருபோதும் திரும்பி வராது. ஜம்மு அண்டு காஷ்மீரில் கல்வி, வேலைவாய்ப்ப மற்றும் வளர்ச்சியை பிரதமர் மோடி ஜி கொண்டு வருவார்.

காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கியது நீக்கியதுதான்… ஒரு போதும் திரும்பி வராது… பா.ஜ.க. அமைச்சர் உறுதி
பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி

அடுத்த 5 ஆண்டுக்கான பட்ஜெட் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.டி.சி. பிரதிநிதிகளால் செய்யப்படும். இந்த பலத்தை உங்களுக்கு மோடி ஜி வழங்கியுள்ளார். டி.டி.சி. உறுப்பினர்கள் பள்ளிகள், மின்சாரம் மற்றும் பிற மேம்பாட்டு பணிகள் குறித்து முடிவுகளை எடுப்பார்கள். இங்குள்ள மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை விரும்புகிறார்கள். அப்துல்லா -மெகபூபா அரசாங்கத்திடமிருந்து சுதந்திரம் வேண்டும். அப்துல்லா மற்றும் முப்தி தங்கள் குழந்தைகளுக்கான கல்வியையும், வளர்ச்சியையும் உறுதி செய்தாலும், ஏழைகளின் குழந்தைகளை ஆயுதங்களை எடுக்கும்படி கட்டாயப்படுத்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.