ரெம்டெசிவிர் தேவைக்கும் சப்ளைக்கும் இடையே இடைவெளி இல்லை.. தினமும் 3.25 லட்சம் குப்பிகள் உற்பத்தி

ரெம்டெசிவிர் தேவைக்கும் சப்ளைக்கும் இடையே இடைவெளி இல்லை.. தினமும் 3.25 லட்சம் குப்பிகள் உற்பத்தி

நாட்டில் ரெம்டெசிவிர் தேவைக்கும், சப்ளைக்கும் இடையே இடைவெளி (பற்றாக்குறை) இல்லை என மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இது தொடர்பாக கூறியதாவது: தற்போது ரெம்டெசிவிர் தேவைக்கும், சப்ளைக்கும் இடையே இடைவெளி (பற்றாக்குறை) இல்லை. தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தினமும் 3.25 லட்சம் குப்பிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரெம்டெசிவிர் தேவைக்கும் சப்ளைக்கும் இடையே இடைவெளி இல்லை.. தினமும் 3.25 லட்சம் குப்பிகள் உற்பத்தி
ரெம்டெசிவிர்

தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்கள் கோரிய தினசரி தேவையான முறையே 20 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் குப்பிகள் அளிக்கப்பட்டு வருகிறது. கரும் பூஞ்சை நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசன் பி ஊசியின் மாத உற்பத்தியை 3.80 லட்சம் குப்பிகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரெம்டெசிவிர் தேவைக்கும் சப்ளைக்கும் இடையே இடைவெளி இல்லை.. தினமும் 3.25 லட்சம் குப்பிகள் உற்பத்தி
லிபோசோமால் ஆம்டோடெரிசின் பி

மேலும் இந்த மாத இறுதிக்குள் 3 லட்சம் குப்பிகள் இறக்குமதி செய்யப்படும். அனைத்து நாடுகளிலிருந்தும் இந்த ஊசியை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக் கூறுகளையும் மத்திய அரசு ஆராய்ந் வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.