பெகாசஸ் குறித்து விவாதிக்க அரசாங்கம் தயார்.. எதிர்க்கட்சிகளே விவாதிக்க தயாராக இல்லை.. மத்திய அமைச்சர் தகவல்

பெகாசஸ் குறித்து விவாதிக்க அரசாங்கம் தயார்.. எதிர்க்கட்சிகளே விவாதிக்க தயாராக இல்லை.. மத்திய அமைச்சர் தகவல்

பெகாசஸ் குறித்து விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது ஆனால் எதிர்க்கட்சிகளே விவாதிக்க தயாராக இல்லை என்று மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் தெரிவித்தார்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சர் கவுசல் கிஷோர் இது தொடர்பாக கூறியதாவது: பெகாசஸ் தொடர்பாக எதிர்க்கட்சி கூட்டம் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் இப்போது பெகாசஸ் பற்றி விவாதிக்க வேண்டும். பிரச்சினையை விவாதிக்க விடாமல் தடுத்தது யார்? அவர்கள் எங்கு விவாதிக்கிறார்கள்? அவர்கள் சலசலப்பை மட்டுமே உருவாக்கி அவைகளை சீர்குலைக்கிறார்கள். அவர்கள் விவாதிக்க விரும்பவில்லை.

பெகாசஸ் குறித்து விவாதிக்க அரசாங்கம் தயார்.. எதிர்க்கட்சிகளே விவாதிக்க தயாராக இல்லை.. மத்திய அமைச்சர் தகவல்
பெகாசஸ் சாப்ட்வேர்

பெகாசஸ் குறித்து விவாதிக்க அரசாங்கமும் தயாராக உள்ளது மற்றும் சபாநாயகரும் இதை தொடர்ந்து கூறி வருகிறார். அவர்களே விவாதிக்க தயாராக இல்லை. ஒரே பொய். நிதிஷ் குமார் ஒரு பெரிய தலைவர். அவர் என்ன சொன்னாலும் (பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்), அவர் தனது சொந்த விருப்பத்துக்கு மாறாக கூறினார். நான் அதை பற்றி கருத்து சொல்லவிரும்பவில்லை.

பெகாசஸ் குறித்து விவாதிக்க அரசாங்கம் தயார்.. எதிர்க்கட்சிகளே விவாதிக்க தயாராக இல்லை.. மத்திய அமைச்சர் தகவல்
அபிஷேக் பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, திரிபுரா பா.ஜ.க.வின் கோட்டை என்பதை அறிவார். பா.ஜ.க. ஒரு வலுவான கட்சி என்பதை அவர் (அபிஷேக் பானர்ஜி) ஏற்றுக் கொண்டார். பிரோசாபாத் மாவட்டத்தின் பெயரை சந்திர நகர் என்று பெயர் மாற்றம் செய்ய அம்மாவட்ட பஞ்சாயத்தில் முன்மொழியப்பட்டிருந்தால் அதனை பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி எதிர்க்கக்கூடாது. அவர்களும் கடந்த காலத்தில் மாவட்ட பெயர்களை மாற்றினார்கள். எனவே அவர்கள் இதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.