விவசாயிகளின் போராட்டத்தில் அன்னா ஹசாரே இணைவார் என்று நான் நினைக்கவில்லை… நிதின் கட்கரி

 

விவசாயிகளின் போராட்டத்தில் அன்னா ஹசாரே இணைவார் என்று நான் நினைக்கவில்லை… நிதின் கட்கரி

விவசாயிகளின் போராட்டத்தில் அன்னா ஹசாரே இணைவார் என்று நான் நினைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய வேளாண் துறை அமைசர் நரேந்திர சிங் தோமருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்குவேன் என்று எச்சரித்து இருந்தார். இந்த சூழ்நிலையில்தான் அன்னா ஹசாரே விவசாயிகளின் போராட்டத்தில் சேருவார் என்று நான் நினைக்கவில்லை என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்தில் அன்னா ஹசாரே இணைவார் என்று நான் நினைக்கவில்லை… நிதின் கட்கரி
நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அன்னா ஹசாரே ஜி சேருவார் (விவசாயிகள் போராட்டத்தில்) என்று நான் நினைக்கவில்லை. விவசாயிகளுக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவில்லை. மண்டி, வர்த்தகர்கள் அல்லது எங்கு வேண்டுமானாலும் தங்களது உற்பத்தியை விற்பனை செய்வது அவர்களின் உரிமை. நான் விதர்பாவிலிருந்து வருகிறேன். 10 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அதை அரசியல் மயமாக்கக்கூடாது.

விவசாயிகளின் போராட்டத்தில் அன்னா ஹசாரே இணைவார் என்று நான் நினைக்கவில்லை… நிதின் கட்கரி
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் அமைப்புகளின் பரிந்துரைகள் சரியானவை என்றால் நாங்கள் அந்த மாற்றங்களை செய்யத் தயாராக உள்ளோம். பேச்சுவார்த்தை இல்லாவிட்டால், அது தவறான தகவல்தொடர்பு, சர்ச்சை மற்றும் தூண்டுதலுக்கு வழிவகுக்கும். பேச்சுவார்த்தை இருந்தால் பிரச்சினைகள் தீர்க்கப்படும், முழு விஷயமும் முடிவடையும், விவசாயிகளுக்கு நீதி மற்றும் நிவாரணம் கிடைக்கும். விவசாயிகளின் நலனுக்கான நாங்கள் பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.