தடுப்பூசி உற்பத்திக்கு ஆலோசனை… மத்திய அரசின் முயற்சிகள் குறித்து தெரியாமல் பேசி விட்டேன்.. நிதின் கட்கரி

 

தடுப்பூசி உற்பத்திக்கு ஆலோசனை… மத்திய அரசின் முயற்சிகள் குறித்து தெரியாமல் பேசி விட்டேன்.. நிதின் கட்கரி

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து தெரியாமல், உற்பத்தியை அதிகரிக்க ஆலோசனை வழங்கி விட்டேன் என நிதின் கட்கரி விளக்கம் கொடுத்துள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் காணொலி வாயிலாக ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டார் அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: நாட்டில் தொற்றுநோய் காலத்தில் கோவிட்-19 தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க அதிக நிறுவனங்களை தடுப்பூசி தயாரிக்க அனுமதி வேண்டும் தடுப்பூசி தேவை சப்ளையை காட்டிலும் அதிகமாக இருந்தால், அது பிரச்சினையை ஏற்படுத்தும். ஆகையால் ஒரு நிறுவனத்துக்கு பதிலாக 10 நிறுவனத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு தடுப்பூசி உற்பத்தி செய்ய உரிமம் வழங்க வேண்டும்.

தடுப்பூசி உற்பத்திக்கு ஆலோசனை… மத்திய அரசின் முயற்சிகள் குறித்து தெரியாமல் பேசி விட்டேன்.. நிதின் கட்கரி
கோவிட்-19 தடுப்பூசி

ஒவ்வொரு மாநிலத்திலும் 2 முதல் 3 ஆய்வகங்கள் உள்ளன. கோவிட்-19 தடுப்பூசிக்கான உற்பத்திக்கான பார்முலாவை அவற்றுக்கு (ஆய்வகங்கள்) வழங்க வேண்டும். அவர்கள் (ஆய்வகங்கள்) ராயல்டி வழங்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார். நிதின் கட்கரி தடுப்பூசி பற்றாக்குறை குறித்து பேசியிருப்பதை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேடி டிவிட்டரில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த ஏப்ரலில் பிரதமர் மோடிக்கு கொரோனா சிக்கல் குறித்து தான் கடிதம் எழுதி ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால் உங்க பாஸ் கவனிப்பாரா? என பதிவு செய்து இருந்தார்.

தடுப்பூசி உற்பத்திக்கு ஆலோசனை… மத்திய அரசின் முயற்சிகள் குறித்து தெரியாமல் பேசி விட்டேன்.. நிதின் கட்கரி
ஜெய்ராம் ரமேஷ்

இந்நிலையில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரியாமல் பேசிவிட்டேன் என நிதின்கட்கரி தெரிவித்தார். இது தொடர்பாக நிதின் கட்கரி டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், நேற்று (நேற்று முன்தினம்) சுதேசி ஜாகரன் மன்ச் ஏற்பாடு செய்து இருந்த கருத்தரங்கில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒரு ஆலோசனையை நான் கூறியிருந்தேன். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை குறித்து என்னிடம் விளக்கினார். நான் அந்த கருத்தரங்கில் பேசுவதற்கு முன்பு மத்திய அரசின் முயற்சிகள் குறித்து எனக்கு தெரியாது.

தடுப்பூசி உற்பத்திக்கு ஆலோசனை… மத்திய அரசின் முயற்சிகள் குறித்து தெரியாமல் பேசி விட்டேன்.. நிதின் கட்கரி
மன்சுக் மாண்டவியா

அந்த கருத்தரங்குக்கு பிறகு, மத்திய அரசு ஏற்கனவே 12 மாறுப்பட்ட ஆலைகள், நிறுவனங்களால் தடுப்பூசி உற்பத்தியை செய்வதற்கு வசதி செய்து வருகிறது. இந்த முயற்சிகளின் விளைவுகளை எதிர்காலத்தில் உற்பத்தியை விரைவாக எதிர்பார்க்கலாம் என மன்சுக் மாண்டவியா என்னிடம் தெரிவித்தார். நான் நேற்று (நேற்றுமுன்தினம்) பரிந்துரைகளை வழங்குவதற்கு முன்னர் அவரது அமைச்சகம் இந்த முயற்சிகளை தொடங்கியுள்ளது என்பது எனக்கு தெரியாது. சரியான திசையில் சரியான நேரத்தில் தலையிடுவதற்கு அவருக்கும், அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். இதை பதிவு செய்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன் என பதிவு செய்துள்ளார்.