ராஜஸ்தான் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பேரம் பேசிய மத்திய அமைச்சர்! – ஆடியோ வெளியானதால் சர்ச்சை

 

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பேரம் பேசிய மத்திய அமைச்சர்! – ஆடியோ வெளியானதால் சர்ச்சை

மத்திய அமைச்சர் ஒருவர் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க எம்.எல்.ஏ-க்களுக்கு பேரம் பேசியது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பேரம் பேசிய மத்திய அமைச்சர்! – ஆடியோ வெளியானதால் சர்ச்சை

மத்தியப் பிரதேசத்தைப் போல ராஜஸ்தானிலும் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க முயற்சித்து வருகிறது. சச்சின் பைலட் தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை இழத்து ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் அது இறங்கியுள்ளது. கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக சச்சின் பைலட் உள்ளிட்டவர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பன்வார் லால் ஷர்மா, விஷ்வேந்திர சிங் ஆகியோரிடம் பேரம் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பேரம் பேசிய மத்திய அமைச்சர்! – ஆடியோ வெளியானதால் சர்ச்சைஇதைத் தொடர்ந்து அவர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சஞ்சய் ஜெயின் என்ற தொழில் அதிபரும் இந்த பேரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதை பாரதிய ஜனதா கட்சி மறுத்து வருகிறது. “இது தொடர்பாக எந்த ஒரு விசாரணைக்கும் தான் தயார். அது என்னுடைய குரல் இல்லை. என்னிடம் விசாரணை நடத்த அழைத்தால் கட்டாயம் செல்வேன்” என்று அமைச்சர் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.