மத்திய அமைச்சர் நாரயணன் ரானே அதிரடி கைது – கெத்து காட்டிய உத்தவ் தாக்கரே!

 

மத்திய அமைச்சர் நாரயணன் ரானே அதிரடி கைது – கெத்து காட்டிய உத்தவ் தாக்கரே!

சுதந்திர தின விழாவின்போது மகாராஷ்டிர மக்களுடன் உரையாற்றிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டை (1947) மாற்றி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எழுப்பியது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நாராயண் ரானே இதனை விமர்சித்து பேசினார். அப்போது பேசிய அவர், “நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டை ஒரு மாநில முதலமைச்சர் அறியாதது வெட்கக்கேடான செயல். அவர் உரையாற்றிய இடத்தில் நான் இருந்திருந்தால் தாக்கரேவின் கன்னத்தில் ஓங்கி அறை கொடுத்திருப்பேன்” என்றார்.

மத்திய அமைச்சர் நாரயணன் ரானே அதிரடி கைது – கெத்து காட்டிய உத்தவ் தாக்கரே!

நாராயணன் ரானேவின் இந்த திமிர் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உரையாற்றும்போது எப்போதும் ஒருசில வார்த்தைகள் தவறுதலாக வரும்; இது சகஜமான ஒரு நிகழ்வு தான். இதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு ஒரு மாநில முதலமைச்சரின் கன்னத்தில் அறைவேன் என சொல்லலாமா என நாராயண் ரானேவை விமர்சித்தனர். சிவசேனா தொண்டர்களும் ரானேவை சோசியல் மீடியாக்களில் பொளந்துகட்டி வருகின்றனர். அதேபோல அவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

Maharashtra: More Covid relaxations on way? CM Uddhav Thackeray to address  the state at 8 pm today

மகாராஷ்டிரா காவல் துறையும் நடவடிக்கையை தொடங்கியது. முதலமைச்சரை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் ரானே மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, எஃப்ஐஆரும் பதிவு செய்தனர் நாசிக் காவல் துறையினர். இதனையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படாலாம் என்று கூறப்பட்ட நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் ரானே கைதுசெய்வதிலிருந்து விலக்கு கேட்டு மனு தாக்கல் செய்தார். அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இச்சூழலில் ரானேவை நாசிக் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு கைதுசெய்யப்படும் முதல் மத்திய அமைச்சர் இவர் தான்.

மத்திய அமைச்சர் நாரயணன் ரானே அதிரடி கைது – கெத்து காட்டிய உத்தவ் தாக்கரே!

ரத்னகிரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக நாசிக் காவல் துறை தலைவர் கூறுகையில், நீதிமன்றத்தின் முன் அமைச்சர் ஆஜர்படுத்தப்பட்டு, அதன் உத்தரவின்பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்றார். 1990ஆம் ஆண்டு சிவசேனா எம்எல்ஏவான ரானே, 1999ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் முதலமைச்சராகும் அளவிற்கு உயர்ந்தார். பால் தாக்கரே உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2005ஆம் ஆண்டு சிவசேனாவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். 2017ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்தும் விலகி பாஜகவில் இணைந்து தற்போது மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சராகியிருக்கிறார்.