அப்பளத்தை தின்றால் கொரோனா வராது! சர்ச்சைக்குள்ளான மத்திய அமைச்சரின் பேச்சு!!

 

அப்பளத்தை தின்றால் கொரோனா வராது! சர்ச்சைக்குள்ளான மத்திய அமைச்சரின் பேச்சு!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய நோயான கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இதற்கான முறையான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், அதனை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத இந்த இக்கட்டான சூழலில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வருகின்றன. மருந்து கண்டிபிடிப்பதற்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12 லட்சத்தை தாண்டிவிட்டது. மேலும் 30 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பிக்கானெர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யும் மத்திய ஜல்சக்தி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சருமான அர்ஜுன் ராம் மெக்வால், ‘பாபிஜி’ எனும் புதிய அப்பளம் ஒன்றை அறிமுகம் செய்து, இந்த அப்பளத்தை சாப்பிட்டால் கொரோனா வாரது. இது கோவிட் 19 வைரசை எதிர்த்து போராடும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பாபிஜி அப்பளப் பாக்கெட்டுகள் இரண்டை கையில் பிடித்துக் கொண்டு, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த அப்பளம் தயாரிக்கப்பட்டுள்ளது என விளம்பரம் கொடுத்துள்ளார்.