குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தவர்கள் இன்று அதன் இறுதி தேதியை நீட்டிக்க கோருகின்றனர்.. மத்திய அமைச்சர்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தவர்கள் இன்று அதன் இறுதி தேதியை நீட்டிக்க கோருகின்றனர்.. மத்திய அமைச்சர்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தவர்கள் இன்று அதன் இறுதி தேதியை 2014லிருந்து 2021வரை நீட்டிக்க வேண்டும் என்று கோருகின்றனர் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக, 2014ம் ஆண்டுக்கு முன் இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இந்த சட்டம் அமலுக்கு வந்தபோது எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது அதே எதிர்க்கட்சிகள், குடியுரிமை திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள இறுதி நாளை (2014ம் ஆண்டு) 2021ஆக நீடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றன.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தவர்கள் இன்று அதன் இறுதி தேதியை நீட்டிக்க கோருகின்றனர்.. மத்திய அமைச்சர்
ஹர்தீப் சிங் பூரி

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 228 இந்தியர்கள் உள்பட மொத்தம் 626 போ ஆப்கானிஸ்தானிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் 77 சீக்கியர்களும் அடங்குவர். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தவர்கள் இன்று அதன் இறுதி தேதியை 2014லிருந்து 2021வரை நீட்டிக்க வேண்டும் என்று கோருகின்றனர் என்று தெரிவித்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தவர்கள் இன்று அதன் இறுதி தேதியை நீட்டிக்க கோருகின்றனர்.. மத்திய அமைச்சர்
மஞ்சிந்தர் சிங் சிர்சா

சிரோமணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மஞ்சிந்தர் சிங் சிர்சா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில், 2020 மற்றும் 2021ல் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க வழி செய்யும் வகையில், குடியுரிமை திருத்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யும்படி அமித் ஷா ஜி மற்றும் மத்திய அரசை கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.