மோடி ஆட்சியில் இருக்கும் வரை குறைந்தபட்ச ஆதரவு விலையை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை.. தர்மேந்திர பிரதான்

மோடி ஆட்சியில் இருக்கும் வரை குறைந்தபட்ச ஆதரவு விலையை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை.. தர்மேந்திர பிரதான்

பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கும் வரை குறைந்தபட்ச ஆதரவு விலையை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் மட்டுமின்றி பல்வேறு துறைகளை சேர்ந்த மத்திய அமைச்சர்களும் விளக்கம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இருக்கும் வரை குறைந்தபட்ச ஆதரவு விலை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை.

மோடி ஆட்சியில் இருக்கும் வரை குறைந்தபட்ச ஆதரவு விலையை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை.. தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

விவசாயிகளை சுயசார்பு அடைய செய்வதற்காக மத்திய அரசு வேளாண் அடிப்படைகட்டமைப்பு நிதியத்தில் ரூ.1 லட்சம் கோடி செலவிடுகிறது. கடந்த காலங்களில் விவசாயிகளை ஏமாற்றிய மக்கள் தற்போது போலி கண்ணீர் வடிக்கிறார்கள். மக்களை தவறாக வழிநடத்துவதில் அவர்கள் வெற்றியடையமாட்டார்கள். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த பிறகும் விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு முறையான விலை பெறவில்லை.

மோடி ஆட்சியில் இருக்கும் வரை குறைந்தபட்ச ஆதரவு விலையை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை.. தர்மேந்திர பிரதான்
பிரதமர் மோடி

ஆனால் புதிய சட்டங்களின்படி (3 வேளாண் சட்டங்கள்), அவர்கள் (விவசாயிகள்) சுதந்திரமாகி விடுவார்கள் மற்றும் தங்களது உற்பத்திக்கு நியாயமான விலையை பெறுவார்கள். கடந்த 70 ஆண்டுகளாக வேளாண் துறை மாறாமல் அப்படியே உள்ளது. அதை மாற்ற தடையற்ற சந்தை கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது. இப்போது விவசாயிகளுக்கு அவர்களின் பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.