கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. குளிர்காலம் முடிந்தவுடன் பெட்ரோல் விலை குறையும்.. பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்

கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. குளிர்காலம் முடிந்தவுடன் பெட்ரோல் விலை குறையும்.. பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்

குளிர்காலம் முடிந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 2 வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அதேவேளையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அதன் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. குளிர்காலம் முடிந்தவுடன் பெட்ரோல் விலை குறையும்.. பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்
பெட்ரோல் பங்கு

இந்த சூழ்நிலையில் குளிர்காலம் முடிவடைந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய தொடங்கி விடும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னணி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சர்வதேச சந்தையில் பெட்ரோலிய விலை அதிகரிப்பு நுகர்வோரையும் பாதித்துள்ளது.

கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. குளிர்காலம் முடிந்தவுடன் பெட்ரோல் விலை குறையும்.. பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்
கச்சா எண்ணெய்

குளிர்காலம் கடந்து செல்லும்போது (முடிந்த பிறகு) விலை கொஞ்சம் குறையும். இது ஒரு சர்வதேச விஷயம். தேவை அதிகமாக உள்ளதால் விலை அதிகமாக உள்ளது. இந்த நிகழ்வு குளிர்காலத்தில் நடக்கிறது. சீசன் முடிவடைந்தவடன் அது (விலை) கீழே வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.