Home அரசியல் "டைம் கொடுத்தேன்… ட்விட்டர் கேக்கல… பழிவாங்கிட்டேன்" - வெளிப்படையாக போட்டுடைத்த மத்திய அமைச்சர்!

“டைம் கொடுத்தேன்… ட்விட்டர் கேக்கல… பழிவாங்கிட்டேன்” – வெளிப்படையாக போட்டுடைத்த மத்திய அமைச்சர்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்திலிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி கணக்குகளை முடக்க ட்விட்டர் மறுத்தது. அப்போதிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இச்சூழலில் மத்திய அரசு புதிய சட்ட விதிகளைக் கொண்டுவந்தது.

"டைம் கொடுத்தேன்… ட்விட்டர் கேக்கல… பழிவாங்கிட்டேன்" - வெளிப்படையாக போட்டுடைத்த மத்திய அமைச்சர்!
Twitter vs Government IT Minister Ravi Shankar Prasad Gave Clear Warning to  Twitter in Parliament | Twitter को IT मंत्री Ravi Shankar Prasad की दो टूक,  'पैसे कमाओ लेकिन कानून से खिलवाड़

இந்த விதிகளுடன் உடன்பட மே 25ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ட்விட்டரை தவிர மற்ற சமூக வலைதள நிறுவனங்களும் அரசின் விதிகளுக்கு இணங்கின. ஆனால் ட்விட்டர் மட்டும் அரசுக்கு தண்ணி காட்டி வந்தது. மாறாக புதிய விதிகள் இந்தியர்களின் கருத்துரிமைக்கு எதிராக இருப்பதாக குற்றஞ்சாட்டியது. இது மத்திய அரசைக் கோபத்துக்குள்ளாக்கியது. ட்விட்டருக்கான சட்டப் பாதுகாப்பை அரசு விலக்கிக் கொண்டது. இதன்மூலம் ட்விட்டரில் யார் என்ன சர்ச்சை கருத்து கூறினாலும் அதற்கு ட்விட்டரே முழு முதற் பொறுப்பு. சட்ட ரீதியாக வழக்குகளைச் சந்திக்க வேண்டும் என்பதே அதற்கு அர்த்தம்.

India Covid: Anger as Twitter ordered to remove critical virus posts - BBC  News

இதுதொடர்பாக கருத்தரங்கில் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “இந்தியாவில் சமூக வலைதள நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. அதே சமயம் அவற்றைப் பயன்படுத்தும் பொதுமக்களின் நலன், நாட்டின் பாதுகாப்பில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். அதற்காகத் தான் புதிய ஐடி விதிகளைக் கொண்டுவந்தோம். ஆனால், ஒருசில சமூக வலைதள நிறுவனங்கள் இந்த விதிமுறைகளுக்கு எதிராக பேசி வருகின்றன.

new IT rules: Don't Indian firms working in the US follow their laws?: RS  Prasad, Telecom News, ET Telecom

லாபம் ஈட்ட இந்தியா வந்திருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் (ட்விட்டர், வாட்ஸ்அப்) ஜனநாயகம் குறித்தும் கருத்து சுதந்திரம் குறித்தும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். தொழில் செய்ய வேண்டுமென்றால் எங்கள் சட்டங்களை பின்பற்றுங்கள். இல்லையென்றால் கிளம்புங்கள். புதிய விதிமுறைகளுக்கு இணங்க கூடுதல் அவகாசம் தருவதாக நான் உறுதியளித்தேன். ஆனால் ட்விட்டர் மதிக்கவில்லை. உடனடியாக அரசு வழங்கும் சட்டப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்கை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும்” என்றார்.

"டைம் கொடுத்தேன்… ட்விட்டர் கேக்கல… பழிவாங்கிட்டேன்" - வெளிப்படையாக போட்டுடைத்த மத்திய அமைச்சர்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

வந்த வழியே சுகரை ஓட வைக்க இந்த ஜூஸை வெறும் வயித்துல குடிங்க

மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது.

விவசாயிகளை திருடர் என்பதா? கொந்தளித்த அண்ணாமலை

மண்ணோடும் மழையோடும் போராடும் விவசாயிகள் திருடர்களா? என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மன அழுத்தத்தால் எத்தனை நோய்கள் வந்தாலும் அத்தனையும் போக்கும் இந்த மசாஜ் வகைகள்

ஒருவருக்கு விருப்பமில்லாத, ஒவ்வாத, பயம் கலந்த அல்லது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறிய முடியாத ஒரு செயலுக்கு உடல் மற்றும் மூளையின் ஒருங்கிணைந்த ஒருவித எதிர்வினைபாடுதான் மனப்பதற்றம். வயது...

ஹரியானாவில் சர்ச்சைக்குரிய நிலத்தில் பா.ஜ.க. முதல்வருக்கு கோயில்…. இடித்து தள்ளிய அதிகாரிகள்

ஹரியானாவில் சர்ச்சைக்குரிய நிலத்தில் பா.ஜ.க. முதல்வருக்கு கட்டிய கோயிலை நகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளிய சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால்...
- Advertisment -
TopTamilNews