தமிழகத்தில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வருவது என் பொறுப்பு- அமித்ஷா

 

தமிழகத்தில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வருவது என் பொறுப்பு- அமித்ஷா

தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்பு அளித்து நினைவு பரிசுகளை வழங்கினர்.

விழா நிறைவு பெற்ற பின்னர் அமித்ஷா, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு திரும்பிச் சென்றார். அங்கு தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி, மூத்த தலைவர் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு, கவுதமி, நமீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதுமட்டுமின்றி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தமிழகத்தில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வருவது என் பொறுப்பு- அமித்ஷா

தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் பேசிய அமித்ஷா, “கூட்டணி குறித்து நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். தமிழகத்தில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வருவது என் பொறுப்பு. தேர்தல் பணிகளை நீங்கள் கவனியுங்கள். இப்போதிலிருந்து நீங்கள் உழைத்தால் அடுத்த 5 ஆண்டில் தமிழகத்தில் பாஜக ஆட்சி வரும். பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும். தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்துங்கள். பல மாநிலங்களில் பாஜக மிகவும் பின்தங்கி இருந்தது ஆனால் இன்று ஆளும் மாநிலமாக மாற்றி காட்டியுள்ளோம், அதேபோல தமிழகத்திலும் பாஜக ஆட்சியமைக்க வேண்டும். இதற்காக பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்” எனக் கூறினார்.