ஒவ்வொரு பிரச்சினைகள், கோரிக்கைகள் தொடர்பாக பேச மத்திய அரசு தயார்.. விவசாயிகளிடம் அமித் ஷா தகவல்

 

ஒவ்வொரு பிரச்சினைகள், கோரிக்கைகள் தொடர்பாக பேச மத்திய அரசு தயார்.. விவசாயிகளிடம் அமித் ஷா தகவல்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம், அவர்கள்து ஒவ்வொரு பிரச்சினை மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு பேச தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு பேச தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அமித் ஷா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு பிரச்சினைகள், கோரிக்கைகள் தொடர்பாக பேச மத்திய அரசு தயார்.. விவசாயிகளிடம் அமித் ஷா தகவல்
அமித் ஷா

டெல்லி-ஹரியானா எல்லை மற்றும் பஞ்சாப் எல்லையில் ஆர்பாட்டம் செய்யும் விவசாயிகளிடம், டிசம்பர் 3ம் தேதி மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் அவர்களின் அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்பதை அவர்களிடம் கூற விரும்புகிறேன். அவர்களின் கவலைகள் மற்றும் கோரிக்கைகளை அனைத்தையும் கேட்க நாங்கள் தயாராக உள்ளோம்.நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் கடும் குளிரில் விவசாயிகள் தங்களது டிராக்டர்கள் மற்றும் டிரோலிகளுடன் தங்கியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பிரச்சினைகள், கோரிக்கைகள் தொடர்பாக பேச மத்திய அரசு தயார்.. விவசாயிகளிடம் அமித் ஷா தகவல்
விவசாயிகள் போராட்டம்

அவர்களை ஆம்புலன்ஸ், உணவு, கழிவறை மற்றும் பாதுகாப்பு போன்ற சுகாதார வசதிகள் வழங்கப்படும் மைதானத்துக்கு அவர்களை மாற்ற டெல்லி காவல்துறை தயாராக உள்ளது. இது விவசாயிகளுக்கும், பயணிகளுக்கும் வசதியாக இருக்கும் என்பதால் விவசாயிகளை நியமிக்கப்பட்ட இடத்துக்கு அழைத்து வரும்படி விவசாய அமைப்புகளின் தலைவர்களை கேட்டுக்கொள்கிறேன். டிசம்பர் 3ம் தேதிக்கு முன்பே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விவசாய அமைப்புகள் விரும்பினால், உங்கள் போராட்டத்தை நியமிக்கப்பட்ட இடத்திற்கு மாற்றியவுடன்,அடுத்த நாள் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க எங்கள் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் என்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.